இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. 184 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்..!

By vinoth kumar  |  First Published Oct 29, 2022, 6:38 AM IST

டெல்லியிலிருந்து பெங்களுருக்கு இண்டிகோ விமானம் 184  பயணிகளுடன் நள்ளிரவு புறப்பட்டது. விமானம் ஓடுபோதையில் சென்றுக் கொண்டிருந்த போது என்ஜினில் முதலில் தீப்பொறி உருவான நிலையில் சிறிது நேரதத்தில் தீ கொழுந்துவிட்டு ஏறிய தொடங்கியது. 


டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமான என்ஜினில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானி தீ விபத்தை முன்கூட்டியே அறிந்ததை அடுத்து 184 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

டெல்லியிலிருந்து பெங்களுருக்கு இண்டிகோ விமானம் 184  பயணிகளுடன் நள்ளிரவு புறப்பட்டது. விமானம் ஓடுபோதையில் சென்றுக் கொண்டிருந்த போது என்ஜினில் முதலில் தீப்பொறி உருவான நிலையில் சிறிது நேரதத்தில் தீ கொழுந்துவிட்டு ஏறிய தொடங்கியது. இதை உடனே உணர்ந்த விமானி உடனே விமானம் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது.

Latest Videos

இதையும் படிங்க;- இந்தியாவில் வெப்பத்தினால் இறப்பவர்கள் எண்ணிக்கை 55% அதிகரிப்பு - லான்செட் ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன ?

இதனையடுத்து, விமானத்தில் இருந்த 177 பயணிகள், 7 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 184 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் உடனே அணைத்தனர். பின்னர், டெல்லியில் இருந்து பெங்களூருக்கு செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு தொழில் நுட்ப கோளாறு காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தில் ஏற்பட்ட தீயால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் படிங்க;-  பெங்களூரில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத குளிர்... வானிலை அதிகாரிகள் கூறுவது என்ன?

click me!