Mohan Bhagwat RSS: ஒவ்வொரு கிராமத்திலும் ஆர்எஸ்எஸ் கிளையை உருவாக்க வேண்டும்: மோகன் பகவத் வலியுறுத்தல்

By Pothy RajFirst Published Dec 12, 2022, 12:18 PM IST
Highlights

இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளையை உருவாக்க வேண்டும், ஒவ்வொரு உறுப்பினரும் நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளையை உருவாக்க வேண்டும், ஒவ்வொரு உறுப்பினரும் நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

அசாமில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் 3 நாட்கள் பயிலரங்கு குவஹாட்டியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கடைசி நாளான நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசியதாவது: 

தேசம் என்பது யாருக்கும் வேறுபாடுகள் பார்க்காமல் அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கக்கூடியதாகும். இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளையை உருவாக்க வேண்டும். சமூகம் தங்களுக்காக சேவை செய்து கொள்ள வாய்ப்பை அமைப்பு வழங்கியுள்ளது, இதறில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் முன்னிருந்து சமூகத்தை நடத்திச் செல்ல வேண்டும். 

பாரத் ஜோடோ நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் இணைந்தார்

இந்தியாவின் பெருமை, பாரம்பரியம்  ஆகியவற்றில் தீர்மானமாக இருந்து, தேசத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் தொண்டரும் பணியற்ற வேண்டும். இந்த தேசம் பாகுபாடுகளை மறைந்து, ஒவ்வொருவருக்கும் முன்னுரிமை வழங்கிட வேண்டும், அனைத்து மக்களும் நாட்டின் முன்னேற்றத்துக்காக ஓய்வின்றி உழைக்க வேண்டும்.

தேசத்துக்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். கடந்த 1925ம் ஆண்டு கேசவ் பலிராம் ஹெட்கேவார் ஆர்எஸ்எஸ் அமைப்பை, மனிதவளத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கினார். கருத்துக்களில் நமக்கிடையே வேறுபாடு இருக்கலாம், ஆனால், சிந்தனையில் அல்ல.

பொய் வாக்குறுதி.. குறுக்கு வழி அரசியல்வாதிகளிடம் உஷாராக இருங்கள்.! எதிர்கட்சிகளை அதிரவைத்த பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் அமைப்பு நூற்றாண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறது, இருப்பினும் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புதிய இளைஞர்களை ஈர்த்து வருகிறது, 6வது தலைமுறையினர் தேசத்துக்காக முன்வருகிறார்கள். பலவீனமான சமுதாயம், அரசியல் சுதந்திரத்தை இனிமையாக அனுபவிக்க முடியாது. 

இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார்

click me!