Gujarat CM: குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்பு: பிரதமர் மோடி, 200 சாதுக்கள் பங்கேற்பு

By Pothy Raj  |  First Published Dec 12, 2022, 9:35 AM IST

குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, அங்கு தொடர்ந்து 2வதுமுறையாக முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்க உள்ளார்.


குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, அங்கு தொடர்ந்து 2வதுமுறையாக முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்க உள்ளார்.

அவருடன் சேர்ந்து 25 கேபினெட் அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

Tap to resize

Latest Videos

பாஜகவுக்கு பின்னடைவு! இமாச்சலில் 3 மக்களவைத் தொகுதிகளை இழந்தது

குஜராத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 182 தொகுதிகளில் 156 இடங்களில் அபாரமாக வென்று, பாஜக 7-வதுமுறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, இன்று பிற்பகல் 2 மணிக்குநடக்கும்பதவி ஏற்பு விழாவில் தொடர்ந்து 2வதுமுறையாக பூபேந்திர படேல் முதல்வராகப் பதவி ஏற்கிறார். குஜராத் மாநிலத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்கஉள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

இது தவிர பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான உ.பி. முதல்வர் ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் ஷர்மா, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார்,  உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார் சுக்விந்தர் சிங் சுகு.. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்பு

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும், பிரச்சாரம் செய்த பாஜக நிர்வாகிகளும் விழாவில் பங்கேற்கிறார்கள். இதுதவிர 200 சாதுக்களும் பங்கேற்கிறார்கள்.

காந்தி நகரில் இன்று பிற்பகலில் நடக்கும் பதவி ஏற்புவிழாவுக்கு 3 பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில்தான் முதல்வரும், அவரின் கேபினெட் அமைச்சர்களும் அமர்கிறார்கள்.

வலதுபக்கம் இருக்கும் பிரதான மேடையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மூத்த நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் அமர்கிறார்கள். இடதுபக்கம் இருக்கும் மேடையில், 200 சாதுக்கள் அமர்கிறார்கள்.

இந்தவிழாவுக்கு பட்டிதார், ஓபிசி, பட்டியலித்தவர்கள், பழங்குடியினருக்கு முன்னுரிமை கொடுத்துஅழைக்கப்பட்டுள்ளனர். 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2026ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து இந்த ஏற்பாடு நடக்கிறது.

இ.பி. முதல்வராக பொறுப்பேற்றார் சுக்விந்தர்சிங் சுக்கு... பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து!!

எம்எல்ஏக்கள் கனு தேசாய், ராகவ் படேல், ருஷிகேஷ் படேல், ஹர்ஸ் சங்க்வி, சங்கர் சவுத்ரி, புர்னேஷ் மோடி, மணிஷா வகில்,ராமன்லால் வோரா, ராமன் பட்கர் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
 

click me!