இ.பி. முதல்வராக பொறுப்பேற்றார் சுக்விந்தர்சிங் சுக்கு... பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து!!

By Narendran S  |  First Published Dec 11, 2022, 9:38 PM IST

இமாச்சல பிரதேசதின் புதிய முதல்வராக சுக்விந்தர்சிங் சுக்கு பொறுப்பேற்றுள்ளதை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


இமாச்சல பிரதேசதின் புதிய முதல்வராக சுக்விந்தர்சிங் சுக்கு பொறுப்பேற்றுள்ளதை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இமாசலபிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 12 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் வாக்குகள் கடந்த 8 ஆம் தேதி எண்ணப்பட்டது. மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 

இதையும் படிங்க: திராவிட மாடல் என்பது தமிழே கிடையாதா? தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுவது என்ன?

Tap to resize

Latest Videos

இந்த வெற்றியை அடுத்து இமாச்சல் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்குவும், துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிகோத்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இமாச்சல பிரதேசதின் புதிய முதல்வராக சுக்விந்தர்சிங் சுக்கு பொறுப்பேற்றுள்ளார். இதை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பிரதமர் மோடி வாழ்த்து:

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இமாச்சல பிரதேச முதலமைச்சராக பொறுப்பற்றுள்ள ஸ்ரீ சுக்விந்தர் சிங் சுகுக்கு வாழ்த்துக்கள். இமாச்சலப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பை வழங்க நான் உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: கரும்பு விவசாயிகளுக்கு விரைவில் சிறப்பு ஊக்க தொகை... அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: 

இதுக்குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டரில், சமுதாயத்தின் அடிப்படை நிலையில் ஏற்படுத்தியுள்ள, உங்களது எழுச்சி ஊக்கமளிப்பதாக உள்ளது. இமாச்சல்பிரதேச மக்களுக்கு தங்களது வெற்றிகரமான சேவை சிறக்க வாழ்த்துக்கள். என்று தெரிவித்துள்ளார்.

click me!