குஜராத்தின் வரலாற்று வெற்றியைப் பாராட்டிய மோடி, இந்தியாவில் நாட்டில் குறுக்குவழி அரசியலுக்கு இடமில்லை என்று பேசினார்.
இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், மத்திய அரசு ஒப்புதலை அடுத்து, 2017-ம் ஆண்டு ரூ.1,575 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் இருந்தது. இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மனிதநேயத்துடன் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் ஒருங்கிணைந்த பலம், முன்னேற்றம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் ஒரு வளர்ந்த இந்தியாவாக மாற முடியும். வளர்ச்சியை நோக்கி குறுகிய அணுகுமுறை இருந்தால், வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும்.
இதையும் படிங்க..பால் விற்பனையாளர் முதல்வரானது எப்படி ? இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர்.. யார் இந்த சுக்விந்தர் சிங் சுகு ?
கடந்த எட்டு ஆண்டுகளில் அனைவரின் முயற்சி மற்றும் நம்பிக்கை மூலம் மனநிலையையும், அணுகுமுறையையும் மாற்றியுள்ளோம். அரசியல்வாதிகள் குறுக்குவழி அரசியலில் ஈடுபடுவது, வரி செலுத்துவோரின் பணத்தை கொள்ளையடிப்பது மற்றும் பொய்யான வாக்குறுதிகள் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவது போன்றவற்றுக்கு எதிராக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், குறுக்குவழி அரசியலால் நாட்டின் வளர்ச்சி ஏற்படாது. சில அரசியல் கட்சிகள் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முயல்கின்றது. இதுபோன்ற அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளை மக்கள் அம்பலப்படுத்த வேண்டும். அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் எனது வேண்டுகோள் குறுக்குவழி அரசியலுக்கு பதிலாக நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். நிலையான வளர்ச்சியுடன் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று பேசினார்.
இதையும் படிங்க..இமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார் சுக்விந்தர் சிங் சுகு.. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்பு !
இதையும் படிங்க..தொடரும் தமிழக காவல்துறையின் அடக்குமுறை.. போராட்டத்தில் குதித்த பாஜக - அண்ணாமலை அறிவிப்பு !