ராஜஸ்தானில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், அவரின் கணவர் ராபர்ட் வத்ராவும் இன்று இணைந்து நடந்தனர்.
ராஜஸ்தானில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், அவரின் கணவர் ராபர்ட் வத்ராவும் இன்று இணைந்து நடந்தனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் கடந்து தற்போது ராஜஸ்தானில் ராகுல் காந்தி நடந்து வருகிறார்.
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்பு: பிரதமர் மோடி, 200 சாதுக்கள் பங்கேற்பு
ராஜஸ்தானில் 17 நாட்கள் நடக்கும் ராகுல் காந்தி 500 கி.மீ தொலைவைக் கடந்து, 21ம் தேதி ஹரியானா மாநிலத்துக்குள் நுழைகிறார். பண்டி மாவட்டத்தில் இருந்து ராகுல் காந்தி இன்று காலை 6 மணிக்கு நடைபயணத்தைத் தொடங்கினார்.
இன்றைய நடைபயணம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய நடைபயணமாக அனுசரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, மண்டியில் உள்ள பாபை, தேஜாஜி மகராஜ் மண்டியலிருந்து யாத்திரை புறப்பட்டது.
कहीं दूर तक ज़मीं नजर नहीं आती है
ये तुम्हारी मोहब्बतों का असर है।
वाह राजस्थान... pic.twitter.com/0hf4cel4gW
ராகுல் காந்தியின் இன்றைய நடைபயணத்தில் ஏராளமான பெண்கள், கட்சியின் பெண் தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர். ராகுல் காந்தியுடன் அவரின் சகோதரி பிரியங்கா காந்தி, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோரும் சேர்ந்தனர். மண்டியில் இருந்து சுவைமிதோப்பூர் மாவட்டத்தில் உள்ள பிப்பால்வாடா நகருக்கு நடைபயணம் புறப்பட்டது. அங்கு ஒருநாள் ஓய்வு எடுத்தபின் மீண்டும் யாத்திரை தொடங்கும்.
चल रहे हैं हिंद को बचाने के लिए...
आज में कांग्रेस महासचिव जी शामिल हुईं। pic.twitter.com/F7jjnh8G2n
ராகுல் காந்தி நடந்து வரும்போது சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான பெண்கள் நின்று வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். நடைபயணம் செல்பவர்கள், தேசிய கீதத்தைப் பாடியும், தேச பக்தி பாடல்களைப் பாடியும், ஆன்மீகப் பாடல்களைப் பாடியபடியும் சென்றனர்.
ராஜஸ்தானில் 7-வது நாளாக ராகுல் காந்தி நடைபயணத்தில் இருக்கிறார். பண்டி மாவட்டத்தில் இருந்து ராகுல் காந்தி இன்றுடன் வெளியேறுகிறார். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நாளாக இன்று கடைபிடிக்கப்படுவதால், ஏறக்குறைய 5ஆயிரம் பெண்கள்வரை நடைபயணத்தில் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.