டெல்லி விமான நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு இல்லை - விமானப் போக்குவரத்து தொடங்கியது

Asianet News Tamil  
Published : Oct 10, 2016, 05:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
டெல்லி விமான நிலையத்தில் கதிர்வீச்சு  கசிவு இல்லை - விமானப் போக்குவரத்து தொடங்கியது

சுருக்கம்

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமாநிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் இருந்து இன்று காலை கதிர்வீச்சு வெளியேறியதால்பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் விரைந்து ஆய்வு நடத்தியதில் அங்கு கதிர்வீச்சு கசிவு இல்லை என்பதை உறுதி செய்தனர்.  

இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் டிநுழைவு வாயிலில் சரக்கு போக்குவரத்துக்கான முனையம் அமைந்துள்ளது. இங்கு வைக்கப்பட்டு இருந்த மருத்துவ உபகரணங்கள் பெட்டியில் இருந்து இன்று காலை கதிர்வீச்சு கசிந்த்தால் எச்சரிக்கை மணி லித்தது.

இது குறித்து விமான நிலை நிர்வாகம் பேரிடர் மேலாண்மை குழுவினருக்கும்அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து அந்த பகுதியை சீல் செய்து ஆய்வு செய்தனர் இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இது குறித்து அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை தீ தடுப்பு அதிகாரி அடுல் கார்க் கூறுகையில், “ இன்று காலை 10.45 மணிக்கு டெல்லி விமானநிலையத்தில் இருந்து கதிர்வீச்சு கசிவதாக புகார் வந்தது. ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்து வந்த மருத்துவ உபகரணங்கள் பெட்டியில் இருந்து கதிர்வீச்சு கசிந்த்து கூறப்பட்டது. ஆனால் அங்கு தீவிரமாக ஆய்வு செய்தில் அங்கு கதிர்வீச்சு கசிவு ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.  ” என்று தெரிவித்தார்.

இதையடுத்து டெல்லி விமானநிலையத்தில் இருந்து விமானங்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.

PREV
click me!

Recommended Stories

காங்கிரசில் 7 கோடிக்கு சீட் விற்பனை? ராகுல், பிரியங்கா மீது பாஜக பகீர் குற்றச்சாட்டு!
இந்தியாவில் காமெனி பெயர் கொண்ட சாலை எங்கே இருக்கு தெரியுமா? வரலாறு முக்கியம் அமைச்சரே