டெல்லி விமானநிலையத்தில் கதிர்வீச்சு வெளியேற்றத்தால் திடீர் பதற்றம் : பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்தனர்

First Published Oct 10, 2016, 3:20 AM IST
Highlights


டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமாநிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் இருந்து இன்று காலை கதிர்வீச்சு வெளியேறியதால், பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். 

இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் டி1 நுழைவு வாயிலில் சரக்கு போக்குவரத்துக்கான முனையம் அமைந்துள்ளது. இங்கு வைக்கப்பட்டு இருந்த மருத்துவ உபகரணங்கள் பெட்டியில் இருந்து இன்று காலை கதிர்வீச்சு கசிந்த்தால் எச்சரிக்கை மணி ஓலித்தது.

இது குறித்து விமான நிலை நிர்வாகம் பேரிடர் மேலாண்மை குழுவினருக்கும், அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து அந்த பகுதியை சீல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

இது குறித்து அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை தீ தடுப்பு அதிகாரி அடுல் கார்க் கூறுகையில், “ இன்று காலை 10.45 மணிக்கு டெல்லி விமானநிலையத்தில் இருந்து கதிர்வீச்சு கசிவதாக புகார் வந்த து. இதையடுத்து அங்கு வந்து சோதனை செய்த தில், ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்து வந்த மருத்துவ உபகரணங்கள் பெட்டியில் இருந்து கதிர்வீச்சு கசிந்த்து கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். 

 இதற்கு முன் கடந்த ஆண்டு மே மாதம் இதுபோல் கதிர்வீச்சு வெளியாகி எச்சரிக்கை மணி  ஓலித்த து. அப்போது மேற்கொண்ட ஆய்வில் அணு உலையில் பயன்படுத்தப்படும் சோடியம் அடோடைடு 131 எனும் மருந்து என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

click me!