கோவில்கள் அருகே ஒயின் ஷாப்புக்கு தடை.. மதுப்பிரியர்கள் அதிர்ச்சி.!!

Published : Jun 01, 2022, 04:54 PM IST
கோவில்கள் அருகே ஒயின் ஷாப்புக்கு தடை.. மதுப்பிரியர்கள் அதிர்ச்சி.!!

சுருக்கம்

Wine shop : கோடை வெயில் கொளுத்துவதால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 

டாஸ்மாக்

தமிழகத்தில் மொத்தம் 5,380 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அந்த கடைகளை ஒட்டி 3,240 பார்கள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளில் தினமும் ரூ.85 கோடி முதல் ரூ.90 கோடி வரை மது விற்கப்படுகிறது. ஆனால் பீர் மட்டும் ரூ.25 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பீர் விற்பனை 30 சதவீதம் வரை அதிகரிக்கும். 

ஆனால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பீர் விற்பனை வழக்கத்தை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் குடிமகன்கள் தற்போது அதிகமாக பீர் வாங்குகிறார்கள். இதன் காரணமாக அதன் விற்பனை உயர்ந்துள்ளது. கோடை வெயில் கொளுத்துவதால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. குளிர்ந்த பீர்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகிறார்கள்.

இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் பீர் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பீர் வகைகளை தட்டுப்பாடு இல்லாமல் அதிக அளவில் இருப்பு வைக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

இந்நிலையில் மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலத்தில், அயோத்தி, மதுரா ஆகிய இடங்களில், கோவில்களை சுற்றியுள்ள பகுதிகளில், மதுபான விற்பனைக்கு அதிரடியாக தடை விதித்து, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அருகிலும், மதுராவில் அமைந்து இருக்கும் கிருஷ்ண ஜென்மபூமி அருகிலும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. 

மேலும் அயோத்தியில் உள்ள மதுபான விற்பனை மையங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உரிமமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு இன்று முதல் (ஜூன் 1 ஆம் தேதி) அமலுக்கு வந்தது. இதன் மூலம் அயோத்தி மற்றும் மதுரா பகுதிகளை சுற்றி அமைந்து இருக்கும் 37 மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளது. இந்த செய்தி குடிமகன்கள் இடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : திமுக அரசின் ஊழல் ஆதாரங்கள் வெளியிடப்படும்.. அதிர்ச்சியில் திமுக.! பயமுறுத்தும் அண்ணாமலை!

இதையும் படிங்க : BJP : அண்ணாமலை மீது திடீர் வழக்குப்பதிவு.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை - பாஜகவில் உச்சகட்ட பரபரப்பு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!