உஷார் மக்களே!! இன்று முதல் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரத் தடை.. தீவிர சோதனை..

By Thanalakshmi VFirst Published Jun 1, 2022, 3:40 PM IST
Highlights

திருமலை திருப்பதியில் பக்தர்கள் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷாம்பு, குடிநீர் பாட்டில்கள் என அனைத்து வகை நெகிழிப்பொருட்களையும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

திருமலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், , ஷாம்பு பாக்கெட்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த எடுத்துச் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி, பக்தர்கள் இன்று முதல் நெகிழிப் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷாம்பு, குடிநீர் பாட்டில்கள் என அனைத்து வகை நெகிழிப்பொருட்களையும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்கள், தனிநபர்கள் அலிபிரி சோதனைச் சாவடியில் முழுமையாக சோதனை செய்யப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருமலையில்  உள்ள கடைகளில் இனி பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மட்கும் அல்லது காகித அட்டைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் ஈரமான மற்றும் உலர் கழிவுகளை தனித்தனி குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும் எனவும் பிளாஸ்டிக் அல்லாத கவர்கள் வழங்குவதற்காக பக்தர்களிடம் வியாபாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இருக்க, கடைகளின் முன் கட்டண அறிவிப்பு பலகைகளை நிறுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கடைக்காரர்கள் தாங்கள் விற்க உரிமம் பெற்ற பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திருமலை கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் விஜிலென்ஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் மூலம் சோதனை நடத்தபட்டு பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர். இதற்கிடையில் திருமலையில் ஏற்கனவே ஓரளவு பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

மேலும் படிக்க: national herald case: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுலுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்

click me!