வக்ஃப் சொத்துக்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை திருத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. மக்களவையில் நிறைவேறியதை தொடர்ந்து மாநிலங்களவையிலும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
Waqf Amendment Bill : வக்ஃப் சொத்துக்களை கட்டுப்படுத்தும் 1995 ஆம் ஆண்டு சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு மசோதாவை கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த சட்டத்தை பரிசீலிக்க கூட்டு நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை செய்யப்பட்டது. இதனையடுத்து கூட்டு நடவடிக்கை குழுவின் ஆய்வின் போது எதிர்கட்சிகள் கொடுத்த திருத்தம் முழுவதுமாக நிராகரிக்கப்பட்டது.
மக்களவையில் நிறைவேறிய வக்ஃப் திருத்த சட்ட மசோதா
இதனையடுத்து மக்களவையில் வக்ஃப் திருத்த சட்ட மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், அரசு சிறுபான்மையினரை அவமானப்படுத்தவும், உரிமைகளை மறுக்கவும் முயற்சிக்கிறது என்றும், அரசியலமைப்புக்கு எதிராக 4D தாக்குதல் நடத்துகிறது என்றும் காங்கிரஸ் அறிவித்தது. இதனையடுத்து 14 மணி நேர விவாதத்திற்கு பிறகு நேற்று அதிகாலை 2 மணியளவில் நிறைவேறியது. 232க்கு எதிராக 288 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியது.
மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்
இந்த நிலையில் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவும் நிறைவேறியது. வாக்கெடுப்பில் 128 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 95 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். நேற்று லோக்சபாவில் மசோதா நிறைவேறியது. இதன் மூலம் மசோதா பாராளுமன்றத்தை கடந்தது. இனி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
ஜனாதிபதி மசோதாவில் கையெழுத்திட்டால் சட்டமாகும். பல மணி நேர விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பரிந்துரையை தள்ளுபடி செய்தனர். மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது.இதனிடையே இந்த மசோதாவில் வாக்கெடுப்பின் போது பாமக உறுப்பினர் அன்புமணி கலந்து கொள்ளலாம் புறக்கணித்தார். தமாக தலைவர் ஜி.கே.வாசன் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். அதிமுகவின் நிலைப்பாடு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் தம்பிதுரை, சிவி சண்முகம் உள்ளிட்டவர்கள் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர்.
VIDEO | Parliament passes Waqf (Amendment) Bill with Rajya Sabha approving it. 128 MPs vote in favour of Waqf (Amendment) Bill in Rajya Sabha, 95 against
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/y4mY2StOba
— Press Trust of India (@PTI_News)