கல்லூரியில் நுழைந்த புலி.. 5,000 மாணவர்களுக்கு விடுமுறை.. 10 நாட்களுக்கு பின் பிடிப்பட்ட பின்னணி..

Published : Oct 16, 2022, 05:45 PM ISTUpdated : Oct 16, 2022, 06:13 PM IST
கல்லூரியில் நுழைந்த புலி.. 5,000 மாணவர்களுக்கு விடுமுறை.. 10 நாட்களுக்கு பின் பிடிப்பட்ட பின்னணி..

சுருக்கம்

மத்திய பிரதேச மாநிலத்தில் பிரபல கல்வி நிறுவன வளாகத்திற்குள் கடந்த 10 நாட்களாக சுற்றி திரிந்த இரண்டு புலிகளில், ஒன்று பிடிப்பட்டது. மற்றொன்று வனப்பகுதிக்கு திரும்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  

போபாலில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன பரந்து விரிந்தது. கிட்டத்தட்ட 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்நிறுவனத்தில் சுமார் 100 ஏக்கர பரப்பில் வனப்பகுதி மற்றும் மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. 

இந்நிலையில் இங்கு கடந்த அக்டோபர் 3 ஆம் தேதியும், அக்.8 ஆம் தேதியும் இரண்டு புலிகள் நுழைந்தன. கடந்த 10 நாட்களாக சுற்றி திரிந்த புலிக்குட்டிகளை பிடிக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. வளாகத்தினை சுற்றி 16 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டன.

மேலும் படிக்க:இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மத்திய பிரதேசத்தில் ஹிந்தியில் மருத்துவ படிப்பு தொடக்கம்..

50க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் புலிகளின் நடமாட்டை கண்காணித்து வந்தனர்.  முதலில் வழித் தவறி நுழைந்த T-123-4 என்ற பெயரிட்ட புலி, அப்பகுதியில் இரண்டு மாடை அடித்துக் கொன்றுள்ளது. மேலும் இரண்டு எருமை மாட்டை தாக்கியுள்ளது.

எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி, கல்வி நிறுவனத்தில் பயிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. முதுகலை படிப்பு மேற்கொள்ளும் 600 மாணவர்களுக்கு மட்டும் வகுப்பு நடந்து வருகின்றன. போபால் அருகில் உள்ள ரதபாணி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து வெளியேறிய புலிக் கூட்டம் தலைநகர் கெர்வா பகுதியில் நடமாடுகின்றன. அந்த கூட்டத்தில் இரண்டு புலிக்குட்டிகள் வழிதவறி இங்கு வந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க:இந்தியாவில் 75 டிஜிட்டல் வங்கிகள்... நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

இந்நிலையில் கடந்த அக்.8 ஆம் தேதி நுழைந்த புலி, வனத்துறையினரால் வைக்கப்பட்ட கூண்டில் பிடிப்பட்டது. இதனை நர்மதாபுரத்தில் உள்ள சத்புரா புலிகள் காப்பகத்தில் விடப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது. மற்றொரு புலியின் நடமாட்டம் கடந்த இரண்டு தினங்களாக இல்லாததால், வனப்பகுதிக்கு திரும்பியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!