Bengaluru Weather: பெங்களூருவாசிகளே! வெயில் கொளுத்தப்போகுது ! வெளியே போயிடாதீங்க!

Published : Feb 24, 2025, 04:10 PM ISTUpdated : Feb 24, 2025, 04:22 PM IST
Bengaluru Weather: பெங்களூருவாசிகளே! வெயில் கொளுத்தப்போகுது ! வெளியே போயிடாதீங்க!

சுருக்கம்

குளிர்ச்சியான காலநிலைக்கு பெயர்பெற்ற பெங்களூருவில் வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை அதிகமாக இருந்து வருகிறது. அங்கு வெயில் தொடர்ந்து கொளுத்தப்போகுது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரு இதமான குளிர்ச்சியான காலநிலைக்கு பெயர் பெற்றது. கோடை காலத்தில் கூட பெங்களூருவில் வெயிலின் தாக்கம் அந்த அளவுக்கு இருக்காது. ஆனால் இப்போது பெங்களூருவாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும்விதமாக கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி எடுக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பகல்நேர வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது. இது இயல்பை விட அதிகம் ஆகும். இந்நிலையில், பெங்களூருவின் சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் மூடுபனி அல்லது மூடுபனியுடன் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தப்பட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சிஸ் ஆகவும் இருக்க வாய்ப்புள்ளது. பெங்களூரு, கடலோர கர்நாடகா மற்றும் வடக்கு உட்புற கர்நாடகாவின் சில பகுதிகள் உட்பட கர்நாடகா முழுவதும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக அதிக வெப்பநிலையை சந்தித்த போதிலும், வெப்பநிலை உயர்வு பருவகால முறைகளில் மாற்றத்தையோ அல்லது கோடையின் ஆரம்ப தொடக்கத்தையோ குறிக்கவில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.

வானிலை அமைப்பின் கூற்றுப்படி, பெங்களூருவில் வெப்பமான வானிலை ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும். இந்த ஆண்டு பிப்ரவரியில் அதிகபட்ச வெப்பநிலை 35.9 டிகிரி செல்சியஸ் ஆகும், இது பிப்ரவரி 17 அன்று பதிவானது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் கிழக்கு காற்று இருப்பதே வெப்பமான வெப்பநிலைக்குக் காரணம் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் என்.புவியரசன் தெரிவித்தார்.

''வழக்கமாக ஆண்டின் இந்த நேரத்தில், பெங்களூருவில் வடகிழக்கு காற்று வீசி குளிர்ச்சியாக இருக்கும். இருப்பினும், வங்காள விரிகுடாவில் எதிர் சூறாவளி இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் இந்தியாவின் தெற்குப் பகுதிகளை நோக்கி கிழக்கு காற்று வீச வழிவகுத்தது'' என்று அவர் கூறினார். இந்த வெப்பநிலை உயர்வு புவி வெப்பமடைதல் அல்லது காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது அல்ல. ஏனெனில் இது எதிர் சூறாவளி இயக்கத்தால் பாதிக்கப்படும் ஒரு பிராந்திய நிகழ்வு என்று என்.புவியரசன் கூறியுள்ளார். 

கடலோர கர்நாடகாவில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், கர்நாடகாவின் உட்புறப் பகுதிகளில் 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு நகரில் அதிகபட்ச வெப்பநிலை 33.2 டிகிரி செல்சியஸ் ஆக‌ பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 1.4 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். எச்ஏஎல் விமான நிலையம் மற்றும் கேஐஏவில் அதிகபட்ச வெப்பநிலை முறையே 33 டிகிரி செல்சியஸ் மற்றும் 32.8 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!