bilkis bano case: பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலைக்கு எதிரான மனு: பரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்பு

By Pothy RajFirst Published Aug 23, 2022, 12:41 PM IST
Highlights

குஜராத்தில் கூட்டுப்பலாத்காரத்துக்கு ஆளாகிய பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் கூட்டுப்பலாத்காரத்துக்கு ஆளாகிய பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பியூரோ உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணமூல்காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா மற்றொருவர் என 3 பேர் தாக்கல் செய்துள்ளனர்.
சுபாஷினி அலி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கிபில் சிபல், மொயத்ரா சார்பில் அபிஷேக் சிங்வி, மற்றொருவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபர்னா பாட் ஆகியோர் ஆஜராகினர். 

மானுடவியல்படி கடவுள் உயர் சாதி இல்லை: சிவனே பட்டியலினத்தவர்தான்: டெல்லி ஜேஎன்யு துணை வேந்தர் பேச்சு

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில் “ நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவில்லை. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் சரியாக இருக்கிறது. நாங்கள் 11 பேர்விடுவிக்கப்பட்ட கொள்கைக்கு எதிராகவே மனுத் தாக்கல் செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்

தமிழகப் பொருளாதாரத்தை சீரழிக்கும் பிடிஆர் தியாகராஜனின் ஈகோ, ஜாலப் பேச்சு: பாஜக தலைவர் அண்ணாமலை விளாசல்

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் மார்ச் 3-ம் தேதி ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானுவையும், அவரின் குடும்பத்தினர் 7 பேரையும் ஒரு கும்பல் தாக்கியது. 

அந்தத் தாக்குதல் நடந்த நேரத்தில் பில்கிஸ் பானு 5 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவரைத் தாக்கிய அந்த கும்பல் அவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்தது. அதுமட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் வைத்திருந்த இரண்டரை வயதுக் குழந்தை உல்ளிட்ட 7 பேரையும் கொலை செய்து அந்த கும்பல் தப்பி ஓடியது. 

இந்த வழக்கில் 11 பேரை சிபிஐ கைதுசெய்தது. இவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது இதை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்த குற்றவாளிகளில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தங்களின் தண்டனையை குறைக்க அல்லது ரத்து செய்யக் கோரினார். அதற்கு குற்றம் நடந்தது குஜராதத்தில், ஆதலால் குற்றவாளிகள் குறித்து குஜராத் அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தது.

பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் விடுதலையானவர்களில் சிலர் நல்ல பிராமணர்கள்: பாஜக எம்எல்ஏ சான்றிதழ்

இதையடுத்து,  கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் அமைப்புகள், தேசிய மனித உரிமைகள் ஆணையம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  

click me!