உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சந்திரசூட் பதவி ஏற்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை இன்று விசாரணைக்கு எடுப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சந்திரசூட் பதவி ஏற்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை இன்று விசாரணைக்கு எடுப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட யுயு லலித்தின் பதவிக்காலம் 74 நாட்கள்தான். அவரின் பதவிக்காலம் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின் புதிய தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் முர்முவும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகிறார் டிஒய் சந்திரசூட்:யுயு லலித் பரிந்துரை
உச்ச நீதிமன்றத்தின் செயல்முறை குறிப்பானையின்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் மூத்தநீதிபதியாகஇருப்பவர்தான் தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும். இந்த செயல்முறை குறிப்பாணை, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பரிந்துரை ஆகியவற்றைக் குறிக்கிறது
அந்த வகையில் பார்த்தால் உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர் டிஒய் சந்திரசூட். செயல்முறை குறிப்பாணையின்படி டிஒய் சந்திரசூட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட்டை நியமிப்பதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு வரும் 9ம் தேதி விசாரிக்கப்பட இருந்தது.
ஆனால், அன்றைய தினம் டிஒய் சந்திரசூட் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுவிடுவார். அவர் பதவி ஏற்றபின் அந்த மனுவை விசாரிப்பதில் சிக்கல் ஏற்படும். ஆதலால், அந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுப்பதாக தலைமை நீதிபதி உமேஷ் லலித் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற 50வது தலைமை நீதிபதி!டிஒய் சந்திரசூட் வழங்கிய முக்கிய தீர்ப்புகள் என்ன?
தலைமை நீதிபதி யுயு லலித் இன்று கூறுகையில் “ தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பதவிஏ ற்புக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை வரும் வியாழக்கிழமை விசாரிப்பதற்குப் பதிலாக இன்று பிற்பகல் 12.45 மணிக்குப்பின் விசாரணைக்கு எடுகிகிறோம். என்னுடைய சகோதர நீதிபதிகள் ரவிந்திரபாட், பெலா எம் திரிவேதி ஆகியோர் அமர்வு விசாரிக்கும்” எனத் தெரிவித்தார்.
நாட்டின் 50வது தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் வரும் 9ம் தேதி பதவி ஏற்பதற்கு முன்பாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.