ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்களை சட்டவிரோதமாக ஒதுக்கியதில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நாளை(நவம்பர் 3ம்தேதி) விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்களை சட்டவிரோதமாக ஒதுக்கியதில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நாளை(நவம்பர் 3ம்தேதி) விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
முதல்வர் ஹேமந்த் சோரன் நாளை காலை, ராஞ்சியில் உள்ள அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிசைவாழ் ஏழைகளுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வீடுகள்: பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் நடந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும் அது தொடர்பான கேள்விகளை எழுப்பி பதிவு செய்ய உள்ளதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
சிறையில் உல்லாசம்.! அமைச்சருக்கு 60 கோடி கொடுத்த சுகேஷ் சந்திரசேகர் - அதிர்ச்சியில் ஆம் ஆத்மி
ஜார்க்கண்ட் மாநில சுரங்கத்துறை சார்பில் 2021ம் ஆண்டு சுரங்க ஒதுக்கீட்டை தன் பெயருக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் ஒதுக்கிக்கொண்டார். இது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு லாபங்களைப் பெறுகிறார் என்று எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் பாஜக மனு அளித்து, ஹேமந்த் சோரன் மீது நடவடிக்கை எடுக்கக் கூறியது. உச்ச நீதிமன்றத்திலும் பாஜக சார்பில் வழக்குத் தொடர்ந்தது
இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து ஆளுநர் ரமேஷ் பாயிஸுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இதுவரை ஆளுநர் ரமேஷ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலக்கரி ஒதுக்கீடு வழக்குத் தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் பச்சு யாதவ் மற்றும் பிரேம் பிரகாஷ் ஆகியோரை அமலாக்கப்பிரிவு கைது செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் அமலாக்கப்பிரிவு நிலக்கரி ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக நடத்திய ரெய்டில் மிஸ்ராவின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.11.88 கோடியை முடக்கினர், மேலும் கணக்கில் வராத ரூ.5.34 கோடியையும் பறிமுதல் செய்தனர்.
குஜராத் மோர்பி தொங்கு பால விபத்து - பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை
இது தவிர மஸ்ரிவிடம் இருந்து ஹேமந்த் சோரனின் வங்கி பாஸ்புக், ஹேமந்த் சோரன் கையொப்பமிட்ட சில காசோலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஹேமந்த் சோரனின் சட்டவிரோத கணக்குகள் அனைத்தையும், வர்த்தகத்தையும் அவரின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா கவனித்து வந்தார்.அவருக்கு துணையாக பச்சு யாதவ், பிரேம் பிரகாஷ் இருந்துள்ளனர் என்று அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேமந்த் சோரனின் அரசியல் ஆலோசகர் அபிஷேக் பிரசாத்திடமும் இந்த வழக்குத் தொடர்பாக அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.