Bilkis Bano case: பில்கிஸ் பானுவுக்கு பின்னடைவு! சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

By Pothy RajFirst Published Dec 17, 2022, 1:52 PM IST
Highlights

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானுவை கூட்டுப்பலாத்காரம் செய்து, குடும்பத்தை கொலை செய்த 11 பேரை விடுவிப்பது குறித்து குஜராத் அரசு முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி பில்கிஸ் பானு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானுவை கூட்டுப்பலாத்காரம் செய்து, குடும்பத்தை கொலை செய்த 11 பேரை விடுவிப்பது குறித்து குஜராத் அரசு முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி பில்கிஸ் பானு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் மார்ச் 3-ம் தேதி ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானுவையும், அவரின் குடும்பத்தினர் ஒரு கும்பல் தாக்கி அவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்தது. அதுமட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் வைத்திருந்த இரண்டரை வயதுக் குழந்தை உள்ளிட்ட 7 பேரையும் அவர் கண்முன்னே கொலை செய்து அந்த கும்பல் தப்பி ஓடியது. 

மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்:பூட்டோவுக்கு சூபி கவுன்சில் கண்டனம்

இந்த வழக்கில் 11 பேரை சிபிஐ கைது செய்தது. இவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த குற்றவாளிகளில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தங்களின் தண்டனையை குறைக்க வேண்டும் அல்லது நன்நடத்தை விதிப்படி ரத்து செய்து விடுதலை செய்யக் கோரினார். அதற்கு குற்றம் நடந்தது குஜராதத்தில், ஆதலால் குற்றவாளிகள் குறித்து குஜராத் அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

10 ஆண்டுகளாகியும், ‘நிர்பயா நிதி’யில் இன்னும் 30 சதவீதம் பயன்படுத்தப்படாமல் தூங்குகிறது

இதையடுத்து,  கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அவர்களை நன்நடத்தை அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் குஜராத் அரசு விடுதலை செய்தது. குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலையாகினர்.

இந்த 11பேர் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பொதுவாக சீராய்வு மனுதாக்கல் செய்தால், அந்த சீராய்வு மனு தீர்ப்பளித்த நீதிபதிகள் அடங்கிய சேம்பரில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

அந்த வகையில் கடந்த 13ம் தேதி நீதிபதிகள் அஜெய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோர் சேம்பரில் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது.

இதையடுத்து, பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் ஷோபா குப்தாவுக்கு உச்ச நீதிமன்றத்தின் துணைப்ப திவாளர் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் “ நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனு மீது கடந்த 13ம் தேதி விவாதிக்கப்பட்டது. அந்தமனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

:தூங்கிக் கொண்டிருக்கநேருவின் இந்தியாஅல்ல!இது மோடியின் புதிய இந்தியா!:ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி

வழக்கறிஞர் ஷோபா குப்தா கூறுகையில் “ இன்னும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அந்த உத்தரவு நகலைமுழுமையாகப் படித்தபின்புதான் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.


 

click me!