Nirbhaya Case: 10 ஆண்டுகளாகியும், ‘நிர்பயா நிதி’யில் இன்னும் 30 சதவீதம் பயன்படுத்தப்படாமல் தூங்குகிறது

By Pothy RajFirst Published Dec 17, 2022, 10:19 AM IST
Highlights

நிர்பயா நிதி உருவாக்கப்பட்டு இன்னும் 10 ஆண்டுகள் ஆகியும், நிதியின் மொத்த தொகையில் ரூ.6 ஆயிரம் கோடியில் இன்னும் 30 சதவீதம் செலவு செய்யப்படாமல் கிடப்பில் உள்ளது.

நிர்பயா நிதி உருவாக்கப்பட்டு இன்னும் 10 ஆண்டுகள் ஆகியும், நிதியின் மொத்த தொகையில் ரூ.6 ஆயிரம் கோடியில் இன்னும் 30 சதவீதம் செலவு செய்யப்படாமல் கிடப்பில் உள்ளது.

2012ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதையடுத்து, ரூ.6ஆயிரம் கோடியில் நிர்பயா நிதி உருவாக்கப்பட்டது.

தூங்கிக் கொண்டிருக்கநேருவின் இந்தியாஅல்ல!இது மோடியின் புதிய இந்தியா!:ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16-17ம் தேதி டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்து 6 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிர்பயா நிதி என்று ரூ.6ஆயிரம் கோடியில் உருவாக்கியது. நாட்டில் பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

2021-22ம் ஆண்டுவரை நிர்பயா நிதிக்காக ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.4,200 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 30 சதவீதம் நிதி பயன்படுத்தப்படவில்லை.

உக்ரைன் போர் நிறுத்த இதுமட்டுமே வழி..! ரஷ்ய அதிபர் புடினுக்கு போன் போட்ட பிரதமர் மோடி - என்ன பேசினார்?

மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ நிர்பயா நிதியில் 70 சதவீதம்மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது, இன்னும் 30 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை. உத்தரப்பிரதேசம் ரூ.305 கோடி, தமிழகம் ரூ.304 கோடி, டெல்லி ரூ.413 கோடி பயன்படுத்தியுள்ளன. தெலங்கானா ரூ.200 கோடி, மத்தியப்பிரதேசம் ரூ.94 கோடி, மகாராஷ்டிரா ரூ.254 கோடியை கடந்த ஆண்டு பயன்படுத்தியுள்ளன

ஒன் ஸ்டாப் சென்டர், பாதுகாப்பு கருவிகள், விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல், பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவாக விசாரணை நடத்தக் கருவிகள் ஆகியவை வாங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

சபரிமலையில் குவியும் பக்தர்கள் ! 28 நாட்களில் கொழித்த வருமானம்

நிர்பயா நிதியில் 30 சதவீதம் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு அதிகாரிகள் கூறுகையில் “ நிர்பயா நிதியில் இன்னும்30 ச தவீதம் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு பல்வேறுகாரணங்கள் உள்ளன. அதிகாரிகளிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை, கொரோனா தொற்று உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன” எனத் தெரிவித்தனர்.

click me!