காங்கிரஸ் கட்சி முடிந்து விட்டதாக நிறைய பேர் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது என்று கூறியுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தேச ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட நடைபயணம் ஜம்மு காஷ்மீரில் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில் இன்று 100வது நாளை முன்னிட்டு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், எனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக திட்டமிட்ட ரீதியில் அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. காங்கிரஸ் கட்சி முடிந்து விட்டதாக நிறைய பேர் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது.
இதையும் படிங்க..அதிசயம்.!! நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. வைரலாகும் போட்டோஸ் !
என் வார்த்தைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள். பாஜகவை காங்கிரஸ் கட்சி நிச்சயம் வீழ்த்தும். எனக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. காங்கிரஸ் காணாமல் போகிறது என்ற கருத்து பாஜகவினரால் பரப்பப்படுகிறது. காங்கிரஸ் ஒரு கருத்தியல் சார்ந்த கட்சி, பாசிசத்திற்கு எதிராக உறுதியாக நிற்கிறது.
இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது. ஆனால், இதனை நமது அரசு ஏற்க மறுக்கிறது. இந்த உண்மையை அரசு மறைத்து வருகிறது. இந்திய அரசு தூங்கும் போது சீனா போருக்கு தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கட்சியில் சில நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றது’ என்று கூறினார்.
இதையும் படிங்க..பாவம் சும்மா விடாது.!! முதல்வர் மு.க ஸ்டாலின் சாதனை இதுதான்.!! கொந்தளித்த எஸ்.பி வேலுமணி