உக்ரைன் போர் நிறுத்த இதுமட்டுமே வழி..! ரஷ்ய அதிபர் புடினுக்கு போன் போட்ட பிரதமர் மோடி - என்ன பேசினார்?

By Raghupati R  |  First Published Dec 16, 2022, 4:27 PM IST

பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய கூட்டமைப்பின் தலைவர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடினார்.


ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் இருதலைவர்களும் சமர்கண்டில் சந்தித்து பேசிக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, தொலைபேசியில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர். அப்போது, எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட பிற முக்கிய விஷயங்களையும் பறிமாறிக் கொண்டனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..அதிசயம்.!! நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. வைரலாகும் போட்டோஸ் !

உக்ரைனில் நடந்து வரும் மோதலின் பின்னணியில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திர நடவடிக்கைகள் மூலம் தீர்வு காணுவதற்கு பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியா நடப்பாண்டில் ஜி20 தலைமைத்துவம் ஏற்று நடத்துவது குறித்தும், அதன் முக்கியத்துவத்தையும் புடினிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை இந்தியா தலைமை ஏற்று நடத்துவதையும்,  இதற்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். மேலும், இருநாடுகளும் இணைந்து செயல்படுவதை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்து இருநாட்டு உறவுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இறுதியில் தங்களுக்குள் பரஸ்பரம் மேற்கொண்டனர்.

இதையும் படிங்க..66 குழந்தைகள் மரணத்திற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்து காரணமா? இந்தியா வெளியிட்ட பகீர் தகவல் !

click me!