Supreme Court: யூடியூப் ஆபாச விளம்பரம்: இழப்பீடு கோரியவருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்

By Pothy RajFirst Published Dec 9, 2022, 3:27 PM IST
Highlights

யூடியூப்பில் வெளியான ஆபாச விளம்பரத்தால் கவனம் சிதறி, தன்னால் காவலர் தேர்வுக்கு படிக்க முடியாமல் தோல்வி அடைந்ததற்கு இழப்பீடு கோரிய இளைஞருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தது

யூடியூப்பில் வெளியான ஆபாச விளம்பரத்தால் கவனம் சிதறி, தன்னால் காவலர் தேர்வுக்கு படிக்க முடியாமல் தோல்வி அடைந்ததற்கு இழப்பீடு கோரிய இளைஞருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தது

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் “ மத்தியப் பிரதேச காவலர் தேர்வுக்கு தயாராகினேன்.

குஜராத்தில் காங்கிரஸ் தோல்விக்கு காரணங்கள் என்ன? ஓர் அலசல்!

ஆனால், யூடியூப்பில் வெளியான ஆபாச விளம்பரங்களால், தன்னால் தேர்வுக்கு முறையாகப் படிக்க முடியவில்லை. ஆதலால், யூடியூப் விளம்பரத்தால் தேர்வில் தோல்வி அடைந்தமைக்கு இழப்பீடாக ரூ.75 லட்சத்தை யூடியூப் நிறுவனம் வழங்க உத்தரவிட வேண்டும் “ எனத் தெரிவித்திருந்தார்

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஏஎஸ் ஓகா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மனுதாரரை கடுமையாகச் சாடினர். நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ கொடுமையான மனு எங்கள் முன் வந்திருப்பது என்னவென்றால், மனுதாரர் மத்தியப்பிரதேச காவலர் தேர்வுக்கு தயாராகினார்.ஆனால் யூடியூப்பில் சந்தாராரக இருக்கும்அவர் பார்க்கும்போதெல்லாம் ஆபாசமான விளம்பரங்கள் வந்தன. இந்த விளம்பரத்தால் தாந் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டேந். ஆதலால், யூடியூப்பை தடை செய்து, ரூ.75 லட்சம் இழப்பீடு பெற்றத் தரக்கோரியுள்ளார். 

நாங்கள் கேட்கிறோம், யூடிப்பில் வரும் விளம்பரங்களை பார்க்க விருப்பம் இல்லாவிட்டால் பார்க்காதீர்கள். விளம்பரத்தை ஏன் பார்த்தார் என்பது அவரின் உரிமையைப் பொறுத்தது. இதுபோன்ற மனுக்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த அந்த மனுதாரருக்கு ரூ.ஒருலட்சம் அபராதம் விதிக்கிறோம்” என உத்தரவிட்டனர்.

ஒரு சதவீதம் வாக்குகூட இல்லீங்க! இமாச்சலில் பாஜகவின் சோகம்!

இதற்கு மனுதாரரின் வழக்கறிஞர் மனுதாரர் தரப்பில் மன்னிப்புக் கோரி, அவர் சாதாரண வேலைபார்ப்பவர் அவரால் அபராதத்தை செலுத்த இயலாதுஎன்றார். இதையடுத்து, அபராதத் தொகையை ரூ.25ஆயிரமாக நீதிபதிகள் குறைத்தனர்.

இந்த அபராதத் தொகையை உச்ச நீதிமன்றத்தின் சமரதீர்வு மையத்துக்கு செலுத்த வேண்டும். இப்படி அர்த்தமற்ற மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் செலுத்தவில்லை என்றால் அபராதத்ததை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டனர். 

click me!