இமாச்சலப்பிரதேசத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 40 தொகுதிகளில் வென்று காங்கிரஸ்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆனால், வெறும் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 40 தொகுதிகளில் வென்று காங்கிரஸ்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆனால், வெறும் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ்கட்சி 40 தொகுதிகளில் வென்று, ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக 25 தொகுதிகளில் வென்று ஆட்சியை பறிகொடுத்தது.
முன்பேசொன்னது ஏசியாநெட்! குஜராத்தில் பாஜகவின் வெற்றிக்கு காரணம் என்ன?
இதில் வாக்கு வங்கி சதவீதத்தைக் கணக்கிட்டும், ஒப்பிட்டும்பார்த்தால் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வெறும் 0.90சதவீதம்தான் இடைவெளி இருக்கிறது. அதாவது, ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது.
2022ம் ஆண்டு நடந்த இமாச்சலப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்கட்சி 43.90 சதவீத வாக்குகளைப் பெற்று 40 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. ஆனால், பாஜக 43 சதவீதவாக்குகளைப் பெற்றும் 25 தொகுதிகளில்தான் வெல்ல முடிந்தது, வெறும் 0.90 சதவீத வாக்குகளில் ஆட்சி அதிகாரத்தையே பாஜக இழந்துள்ள பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டில் நடந்த தேர்தலோடு ஒப்பிட்டால், பாஜக 48.80 சதவீத வாக்குகளைப் பெற்று, 44 இடங்களில் வென்றிருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் 43 சதவீத வாக்குகளைப் பெற்று, 25 இடங்களில்தான் வென்றது
Gujarat Election Results 2022: குஜராத்தில் காங்கிரஸ் தோல்விக்கு காரணங்கள் என்ன? ஓர் அலசல்!
ஆனால், காங்கிரஸ் கட்சியோ 2017ம் ஆண்டு தேர்தலில், 41.70 சதவீத வாக்குகளைப் பெற்று 21 இடங்களில் வென்றிருந்தது. இந்த தேர்தலில் 43.90 சதவீத வாக்குகள் அதாவது கடந்த தேர்தலைவிட ஏறக்குறைய 3 சதவீத வாக்குகளை கூடுதலாகப் பெற்று, 19 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி, ஆட்சிக்கு வந்துள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸிடம் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வி அடைந்ததுதான் ஆட்சியை இழக்கக் காரணமாகும்.
இதில் சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் வெற்றி பெற்றதும், பாஜக தோல்விக்கான காரணங்களாகும். ஆம் ஆத்மி கட்சிக்கு 1.10 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பகுஜன் சமாஜ்(0.35%), இந்தியக் கம்யூனிஸ்ட்(0.01%), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(0.66) கட்சிகளும் போட்டியிட்டன என்றாலும் பெரிதாக தாக்கத்தை தேர்தலில் ஏற்படுத்தவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் 1.50 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில் இந்த முறை 0.66 சதவீதம் என சுருங்கிவிட்டது.
தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றது ஆம் ஆத்மி… 12.9% வாக்குகள் பெற்று சாதனை!!
இன்னும் விரிவாகக் கூற வேண்டுமென்றால், பகுஜன் சமாஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்குகளைவிட நோட்டாவுக்கு கிடைத்த வாக்கு சதவீதம் அதிகம். அதாவது நோட்டாவுக்கு 0.59 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
இமாச்சலப்பிரதேசத்தைப் பொறுத்தவரை கடந்த 1985ம் ஆண்டிலிருந்து இதுவரை எந்த அரசும் தொடர்ந்து இருமுறை ஆட்சி அரியணையில் அமர்ந்தது இல்லை. அந்த வரலாறு இந்தத் தேர்தலிலும் தொடர்ந்துவிட்டது.