இமாச்சலப்பிரதேசத்தில் 4 மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக 3 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. சட்டசபைத் தேர்தலிலும் 25 தொகுதிகளுடன் ஆட்சியைப் பறிகொடுத்த பாஜக, மக்களவை இடைத் தேர்தலிலும் தோல்வி அடைந்து.
இமாச்சலப்பிரதேசத்தில் 4 மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக 3 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. சட்டசபைத் தேர்தலிலும் 25 தொகுதிகளுடன் ஆட்சியைப் பறிகொடுத்த பாஜக, மக்களவை இடைத் தேர்தலிலும் தோல்வி அடைந்து.
இமாச்சலப்பிரதேச்தில் உள்ள ஷிம்லா, ஹமிர்பூர், கங்கரா ஆகிய மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. ஆனால், மண்டி மக்களவைத் தொகுதியில் மட்டும் பாஜக வென்றது.
ஒரு சதவீதம் வாக்குகூட இல்லீங்க! இமாச்சலில் பாஜகவின் சோகம்!
சட்டசபைத் தேர்தலில் 68 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 40தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜக 25 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பறிகொடுத்தது. இரு கட்சிகளுக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 0.90 சதவீதம்தான் என்றாலும், குறைந்த அளவு வாக்குவித்தியாசத்தில் ஆட்சியை பாஜக இழந்தது.
அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், “ இமாச்சலப்பிரதேசத்தில் அதிகரி்க்கும் வேலையின்மை, பணவீக்கம், அரசுக்கு எதிரான மனநிலைதான் பாஜக ஆட்சியை இழக்கக் காரணம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையாகும். அதை செயல்படுத்தாத பாஜகவை ஆட்சியில் இருந்து மக்கள் அகற்றினர்” எனத் தெரிவித்தார்
பில்கிஸ் பானு வாழும் தொகுதியிலும் வென்ற பாஜக ! காங்கிரஸுக்கு 3வது இடம்
மண்டி மக்களவைத் தொகுதியில் மட்டும் பாஜக வென்றது. இந்தத் தொகுதியில் மொத்தம் 17 சட்டசபைத் தொகுதிகள் வருகின்றன. இந்தத் தொகுதியில் 5 சட்டசபைத் தொகுதிகளை மட்டும் காங்கிரஸ் வென்றது.
ஹமிர்பூர் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமாலுக்கு பாஜக போதுமான முக்கியத்துவம் அளிக்காதது பெரிய அதிருப்தியாக இருந்தது. அந்த அதிருப்தி தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்காக மாறியுள்ளது.
காங்கரா மக்களவைத் தொகுதியில் பிராமணர்கள் நிராகரிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்தத் தொகுதியில் 21 சதவீதம் பிராமணர்கள் இருந்தும் அங்கு பிராமணர் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
காங்கரா மக்களவைத் தொகுதியில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. இந்தத் தொகுதியில் சரிவர மேம்பாட்டுப்பணிகள், உட்கட்டமைப்பு வசதிகள் செய்யாமல் இருப்பது வாக்காளர்ளுக்கு பெரியஅதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் நிர்மலா சீதாராமன் 5-வதுமுறையாக இடம் பிடித்தார்
இதனால் மண்டி மக்களவைத் தொகுதியில் 11 சட்டசபைத் தொகுதிகளில் 6 இடங்கள் காங்கிரஸுக்கும், 5 இடங்கள்பாஜகவுக்கும் கிடைத்தன. ஷிம்லா மக்களவைத் தொகுதியிலும் பாஜக துடைத்து எறியப்பட்டது. இந்தத் தொகுதியில் வரும் 17 சட்டசபைத் தொகுதியில் பாஜக மூன்றில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது, சுயேட்சை ஒருவர் வெற்றி பெற்றார்.