சொத்துக்காக மனநிலை பாதிக்கப்பட்ட அக்காவை கொடூரமாக தாக்கும் தங்கை!

 
Published : Jan 29, 2018, 03:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
சொத்துக்காக மனநிலை பாதிக்கப்பட்ட அக்காவை கொடூரமாக தாக்கும் தங்கை!

சுருக்கம்

The sister who attacked the mentally ill sister for the property!

சொத்து தகராறு காரணமாக, மனநோயாளியான மூத்த சகோதரி என்றும் பார்க்காமல், அவரது தங்கை கொடூரமாக தாக்கும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வெளியாகி வருகிறது.

கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது சொத்துக்களை, தனது மூத்த மகளுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.

மூத்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டதால், அவருக்கே தனது சொத்துக்களை எழுதி வைத்தும், இரண்டாவது மகளுக்கு சொத்து ஏதும் எழுதி வைக்காமலும் அவர் இறந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இரண்டாவது மகள், மனநலம் பாதிக்கப்பட்ட மூத்த சகோதரியை, கொடூரமாக தாக்கியுள்ளார். மறுப்பேதும் கூற முடியாத நிலையில் மூத்த சகோதரி அடி வாங்கும் காட்சியை, பக்கத்து வீட்டார் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த வீடியோவை, அவர் அருகே உள்ள போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனாலும், இந்த வீடியோ குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதையடுத்து, வீடியோவை எடுத்தவர்கள், அதனை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ காட்சி பார்ப்பவரது நெஞ்சங்களை பதற வைக்கும் விதமாக உள்ளது. இதனைப் பார்ப்பவர்களும், சமூக ஆர்வலர்களும், அந்த பெண்ணின் தங்கையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரை தடுக்க பாகிஸ்தானுக்கு அல்லாஹ் வந்து உதவினார்..! இந்தியாவை பலவீனமாகக் காட்டும் அசீம் முனீர்..!
மகாராஸ்டிரா உள்ளாட்சி தேர்தலிலும் அடித்து தூக்கிய பாஜக..! உத்தவ், சரத் பவார் மொத்தமா காலி