பசியால் திருடிய சிறுவர்களை நிர்வாணப்படுத்தி செருப்பு மாலை - மகாராஸ்ட்ராவில் கொடூரம்...

 
Published : May 22, 2017, 09:44 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
பசியால் திருடிய சிறுவர்களை நிர்வாணப்படுத்தி செருப்பு மாலை - மகாராஸ்ட்ராவில் கொடூரம்...

சுருக்கம்

The shop owner and his 2 sons were arrested after the shocking incident

பசித்ததால், கடையில் இருந்த உணவுப் பொருட்களை எடுத்து தின்ற இரு சிறுவர்கள் நிர்வாணப்படுத்தி, செருப்புமாலை அணிவித்து கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் இந்த காட்சிகளை செல்போனில்படம் பிடித்து பலருக்கு அனுப்பியதால் டீக்கடைக்கார் அவருடைய மகனுடன் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் உல்காஸ் நகர் பகுதியில் முகமது பதான் என்பவர் பேக்கரி நடத்தி வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்த 8, 9 வயது கொண்ட இரு ஏழை சிறுவர்களுக்கு பசி எடுத்துள்ளது. இதனால், கடை உரிமையாளரிடம் அனுமதி கேட்காமலேயே கடையில் இருந்த உணவுப் பதார்த்தங்களை எடுத்து அவர்கள் இருவரும் சாப்பிட்டு உள்ளனர். அவர் பிடிப்பதற்கு அந்த சிறுவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இதனால்,  ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் முகமது பதான்(வயது62), தனது இரு மகன்கள் இர்பான்(வயது26), சலிம்(வயது22)ஆகியோரை அழைத்து அந்த சிறுவர்களுக்கு பிடித்து அழைத்து வந்து நல்ல பாடம் புகட்ட கூறியுள்ளார்.

அந்த சிறுவர்ள் இருவரையும் கண்டுபிடித்து அழைத்துவந்து அவர்களின் தலையை மொட்டையடித்து, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்துள்ளனர். மேலும், அவர்களை நிர்வாணப்படுத்தி, இழுத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளத்திலும் வெளியிட்டனர்.

இந்த சம்பவம் மிகப்பெரிய கூட்டத்தினர் முன் நடந்தபோதும், ஒருவர்கூட இதைத் தடுக்க முன்வரவில்லை.

இதையடுத்து, அந்த சிறுவர்களில் ஒருவனின் தாய் ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தனது மகன் தலை மொட்டையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நடந்த சம்பவங்களை கேட்டு ஆத்திரமடைந்த அந்த சிறுவனின் தாய், போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் கடை உரிமையாளர் முகமது பதான், அவரின் இரு மகன்கள் இர்பான், சலீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது, ஐ.பி.சி பிரிவு 355,(அவமானப்படுத்தும்நோக்கில் தாக்குதல்), பிரிவு 500(அவதூறு ஏற்படுத்துதல்), பிரிவு 323(தாமாக ஒருவரை புண்படுத்துதல்), போஸ்கோ என்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சட்டம் ஆகியபிரிவுகளில் வழக்குப்பதிவு

பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாயார் கூறும்போது, "எனது மகன்களின் தலையை மொட்டையடித்து அவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!