SBI Alert: மக்களே உஷார்..!! எஸ்.பி.ஐ ATMல் பணம் எடுக்க போறீங்களா..? இந்த ரூல்ஸ் கொஞ்சம் கவனியுங்க !!

Published : Jan 18, 2022, 11:06 AM IST
SBI Alert: மக்களே உஷார்..!! எஸ்.பி.ஐ  ATMல் பணம் எடுக்க போறீங்களா..? இந்த ரூல்ஸ் கொஞ்சம் கவனியுங்க !!

சுருக்கம்

எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான  விதிகளில்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே புதிய விதிமுறைகளை பின்பற்றுமாறு வாடிக்கையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது எஸ்.பி.ஐ.

எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை எஸ்.பி.ஐ வங்கி மாற்றியுள்ளது. ஏ.டி.எம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்.பி.ஐ புதிய முயற்சியை எடுத்துள்ளது. எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க OTP ஐ உள்ளிடுவது தற்போது கட்டாயமாகும். இந்த புதிய விதியின் கீழ், வாடிக்கையாளர் OTP இல்லாமல் பணத்தை எடுக்க முடியாது. 

இதில் பணம் எடுக்கும் நேரத்தில், வாடிக்கையாளர்களின் மொபைல் போனில் OTP வரும். அதை உள்ளிட்ட பிறகே, ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியும். மோசடியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காகவே இவ்வாறு புதிய விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 10,000 மற்றும் அதற்கு மேல் திரும்பப் பெறும்போது,  இந்த விதிகள் பொருந்தும். எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம்மில் இருந்து ஒவ்வொரு முறையும் ரூ.10,000 மற்றும் அதற்கு மேல் பணம் எடுக்க அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் டெபிட் கார்டு பின்னுக்கு அனுப்பப்படும் OTP ஐ பெற அனுமதிக்கிறது. 

எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க OTP தேவைப்படும். இதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இந்த OTP ஆனது 4 இலக்க எண்ணாக இருக்கும். அதை வாடிக்கையாளர் ஒரு முறை பரிவர்த்தனைக்கு பெறுவார். நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை உள்ளிட்டதும், ஏடிஎம் திரையில் OTP ஐ உள்ளிடுமாறு கேட்கப்படும். வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTPஐ பணம் எடுக்க இந்தத் திரையில் உள்ளிட வேண்டும்’ என்று எஸ்.பி.ஐ கூறியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!
வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!