
மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகளும் இந்த ரேஷன் கார்டுகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் சுமார் பல கோடி பயனாளிகள் இலவச உணவு தானியங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற பல்வேறு வழிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதில் மத்திய மாநில அரசுகள் தெளிவாக இருக்கின்றனர். இப்படி இருக்கையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியானது. இதன் மூலம், நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கடையிலும் ரேஷன் பெற முடியும். முன்னதாக ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆக இருந்தது. தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ளது. நீங்கள் இன்னும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், வரும் ஜூன் 30 2022க்குள் அதை செய்து முடிக்கவும்.
அதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் ' start now' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்பு அதில், முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்கள் கேட்கப்படும். அதை சரியாக நிரப்ப வேண்டும். அதில் ' start now' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்பு அதில், முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்கள் கேட்கப்படும். அதை சரியாக நிரப்ப வேண்டும். ஆதாரை இணைக்காமல் இருந்தால் உடனடியாக இணைப்பது நல்லது.
அப்படி இணைக்காவிட்டால் ரேஷன் கார்டின் பலன்கள் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். எனவே உடனடியாக இணைக்கும்படி அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ரிஜினல் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ஜெராக்ஸ். ஆன்லைனில் இந்த ஆவணங்களை கொண்டு ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு.! குவாட்டர் ரூ.20..பீர் ரூ.10 குடிமகன்கள் ஷாக் !!