12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு.. தேதியை அறிவித்த கல்வித்துறை அமைச்சர்..

By Thanalakshmi VFirst Published May 20, 2022, 2:28 PM IST
Highlights

கர்நாடகா மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு வழியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் (பியுசி)  நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கர்நாடக இடைநிலை கல்வித் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. எஸ்எஸ்எல்சி தேர்வில் மொத்தம் 85.63% பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் தெரிவித்தார். 

கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வுகள் ஆப்லைன் முறையில் நடத்தப்பட்டது. மேலும் ஜூன் மாதம் நடைபெறுவிருந்த 12 ஆம் வகுப்பு தேர்வு முன்னதாகவே நடத்திமுடிக்கப்பட்டது.இதனிடையே 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். இந்நிலையில் அமைச்சர் நாகேஷ் தனது ட்விட்டரில்,” 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பீட்டு செய்முறை அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. இதன் தேர்வு முடிவுகள் ஜூன் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.தேர்வு முடிவுகளை www.karresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

மேலும் படிக்க: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை.. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை.. வானிலை அப்டேட்..

click me!