மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு.! குவாட்டர் ரூ.20..பீர் ரூ.10 குடிமகன்கள் ஷாக் !!

By Raghupati R  |  First Published May 20, 2022, 1:53 PM IST

Price Hike : அனைத்து குவாட்டர் மதுபாட்டிலின் விலையும் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. மேலும், அனைத்து ‘பீர்’ வகைகளும் ஒரு பாட்டிலுக்கு குறைந்தது ரூ.10 முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொதுவாக பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மது விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் பழைய நேரப்படி விற்பனை நடைபெறுகிறது.

Tap to resize

Latest Videos

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக கடந்த 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் மதுவிலக்கு ஆயதீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. டாஸ்மாக் மதுபானங்களுக்கு குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.10, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.20, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.40 வரை விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு அருகில் இருக்கும் தெலுங்கானாவிலும் அனைத்து வகை மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் ஆண்டு வருவாய் ரூ.6000 முதல் ரூ.7000 கோடி வரை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், ரூ.495 மதிப்பிலான 1,000 மி.லி அளவு கொண்ட ‘புல்’ மதுபாட்டிலின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.615 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், அனைத்து குவாட்டர் மதுபாட்டிலின் விலையும் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. மேலும், அனைத்து ‘பீர்’ வகைகளும் ஒரு பாட்டிலுக்கு குறைந்தது ரூ.10 முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த செய்தி குடிமகன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க : நம்பி பழகிய காதலி.. நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூர காதலன்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !

இதையும் படிங்க : Sri Lanka Crisis : திவாலான இலங்கை அரசு.. ஆகஸ்ட் முதல் உணவு நெருக்கடி ஏற்படும்! இலங்கை மக்கள் கதி என்னவாகும் ?

click me!