இனி ரயிலில் பாட்டு கேட்டால் அபராதம்.. ரயில் பயணிகள் ஷாக் !! வெளியான அறிவிப்பு !!

Published : Jan 22, 2022, 12:21 PM IST
இனி ரயிலில் பாட்டு கேட்டால் அபராதம்.. ரயில் பயணிகள் ஷாக் !! வெளியான அறிவிப்பு !!

சுருக்கம்

ரயிலில் பயணம் செய்யும் போது சத்தமாக பாட்டு கேட்பதற்கும், செல்போனில் சத்தமாக பேசுவதற்கும் தடை விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ரயிலில் பயணம் செய்வோருக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது ரயில்வே துறை. ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தொல்லை தரும் வகையில் ரயிலில் சத்தமாக பாட்டு கேட்க கூடாது, செல்போனில் சத்தமாக பேசக்கூடாது என்றும் மீறினால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாதாரணமாக ரயில் பயணத்தில் பாட்டு கேட்பது, செல் போனில் பேசுவது இயல்பான ஒன்று.இது செய்யக்கூடாது என்று ரயில்வே துறை அறிவித்திருப்பது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. 

மேலும் ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக புகார் அளித்தால் உடனடியாக ரயில்வே போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் இரவு 10 மணிக்கு மேல் விளக்குகள் எரிய கூடாது என்றும் ரயில்வே நிர்வாகம் புதிய விதிமுறைகளில் தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!