விமானத்தை பறக்கவிட்டு… படுத்து தூங்கிய பைலட்… அந்தரத்தில் 300 பயணிகள் அலறல்

 
Published : May 07, 2017, 09:57 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
விமானத்தை பறக்கவிட்டு… படுத்து தூங்கிய பைலட்… அந்தரத்தில் 300 பயணிகள் அலறல்

சுருக்கம்

The pilot of the flight lying down and 300 passengers scream

விமானத்தை நடுவானில் பறக்கவிட்டு, 300பயணிகளின் பாதுபாப்பை உணராமல், “பிஸ்னஸ் கிளாசில்” சொகுசாக படுத்து தூங்கிய பைலட்டைப் பார்த்த பயணிகள் அய்யோ என அலறி, புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானத்தில் நடந்துள்ளது.

கடந்த இரு வாரத்துக்கு முன் கராச்சி நகரில் இருந்து பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பி.கே.785 என்ற விமானம் லண்டனுக்கு சென்றது. அந்த விமானத்தில் “எக்னாமி கிளாசில்” 293 பயணிகளும், “பிஸ்னஸ் கிளாசில்” 15 பயணிகளும் பயணம் செய்தனர்.

விமானத்தின் கண்காணிப்பாளராக அலி ஹசன் யாஸ்தானி இருந்தார். விமானத்தை மூத்த பைலட்டாக அமிர் அக்தர் ஹஸ்மியும், பயிற்சி பைலட்டாக முகமது ஆசாத் அலியும் இயக்கினர். விமானம் புறப்பட்டு வானத்தில் பற்த சிறிது நேரத்தில் மூத்த பைலட் அமிர் அக்தர் ஹஸ்மி, பயிற்சி பைலட் ஆசாத் அலியிடம் விமானத்தை இயக்கம் பொறுப்பை கொடுத்துவிட்டார்.

அதன்பின் அவர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை. விமானம் அந்தரத்தில் பறந்து கொண்டு இருக்க, 300-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்தில் பயணித்திருக்க பைலட்டைக் காணவில்லை. ஏறக்குறைய இரண்டரை மணி நேரமாக பயணிகள் அமைதி காத்தனர்.

திடீரென ஒருபயணி “பிஸ்னஸ் கிளாஸ்” பகுதியில் ஒருவர் சீட்டில் முகத்தைமூடி படுத்து தூங்குவதைக் கண்டு பார்த்தபோது, அது மூத்த பைலட் அமிர் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை உடனடியாக அனைத்து பயணிகளிடம் கூறியவுடன், பயணிகள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் பயணிக்கிறார்கள், உடனடியாக பைலட்டை எழுப்புங்கள் என விமானப் பணியாளர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து மூத்த விமானப் பணியாளர்கள் படுத்து தூங்கிக்கொண்டு இருந்த மூத்த பைலட் அமிரை தட்டி எழுப்பினர். அதன்பின் வந்து விமானத்தை அவர் இயக்கினார்.

இதுகுறித்து பயணிகள் ஏராளமானோர், லண்டன் இறங்கியவுடன் பாகிஸ்தான் விமான அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், அமிர் மீது எந்த நடவடிக்ைகயும் இதுவரை இல்லை.

ஏஎென்றால், பாகிஸ்தான் விமானப் பைலட் அமைப்பின் தலைவராக அமிர் இருப்பதால், அவர் மீது நிறுவனம் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது. இதுகுறித்து விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தன்யால் கிலாணியிடம் கேட்டபோது, “ கேப்டன் அமிர் ஹஸ்மியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது. மற்றபடி வேறு எந்த தகவலையும் தெரிவிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

இதற்கு முன் கடந்த 2009ம்ஆண்டு ஜூன் மாதம் ஐரோப்பிய விமானம் ஒன்றில் மூத்த பைலட், விமானம் பறக்கும் நிலைக்கு வந்தவுடன் பயிற்சி பைலட்டிடம் விமானத்தை கொடுத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார், விமானம் திடீரென அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்ததில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!