யோவ், யமுனை நதியில தண்ணி எங்கய்யா…? அதிகாரிகளை வறுத்தெடுத்த ஆதித்யநாத்

First Published May 7, 2017, 5:24 PM IST
Highlights
where is the water in yamuna asks adityanath


முதல்வராகப் பதவி ஏற்றபின் முதல் முறையாக ஆக்ரா நகருக்கு இன்று சென்ற ஆதித்யநாத், யமுனை நிதியில் தண்ணீர் இல்லாமல், கழிவுநீர் செல்வதைப் பாரத்த்து அதிகாரிகளை கடுமையாக கடிந்து கொண்டார்.

“யமுனை நதியில் தண்ணீர் எங்கே இருக்கிறது” என்று அதிகாரிகளிடம் ஆதித்யநாத் கடுமையாக நடந்து கொண்டார்.

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றதையடுத்து, அங்கு கோரக்பூர் மடாதிபதியும், எம்.பி.யுமான  யோகி ஆதித்யநாத் முதல்வராக  பொறுப்பேற்றுள்ளார். இவரின் ஆக்கப்பூர்வமான பல செயல்கள் மக்கள் மத்தியில் பாராட்டையும், சில செயல்பாடுகள் சிறுபான்மையினரிடத்தில் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தும், தொடர்ந்து அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில்,முதல்வராக பொறுப்பு ஏற்றபின் முதல்முறையாக ஆக்ரா நகருக்கு ஆதித்யநாத் இன்று சென்றார். அப்போது உலகப் புகழ்பெற்ற, உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் அருகே பாயும் யமுனை நதியையும், அங்கு நடந்து வரும் சுத்தப்படுத்தும் திட்டம் குறித்தும் ஆதித்யநாத் பார்வையிட்டார்.

அப்போது, ஆக்ரா மாவட்ட கலெக்டர் கவுரல் தாயல் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆதித்யநாத் பேசுகையில், “ யமுனை நதியின் தண்ணீர் எங்கே இருக்கிறது? கழிவுநீர்தான் ஓடுகிறது, எருமைகள்தான் உள்ளே இருக்கின்றன. உலகிலேயே மிகவும் அசுத்தமான நதியாக யமுனை மாறிவிட்டது.

யமுனை நதியை சுத்தப்படுத்தும் பணி ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க மறுபுறம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் சேர்கிறது. சிறிது காலத்துக்கு சுத்திகரிக்கப்படாத நீரை யமுனை ஆற்றில் கலக்காதீர்கள். இப்படி நடந்தால், எப்படி மின் உற்பத்தி நடக்கும்” என கடுமையாக பேசி உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன்பின், யமுனைநதியை சுத்தப்படுத்தும் பணித்திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்ட அறிந்தார். ஆக்ராவில் உள்ள குடிசைவாழ் பகுதியான உக்காரா பகுதியையும் ஆதித்யநாத்பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு ேவறு வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதி அளித்தார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் 15 பேர் பலியாகினர். அவர்களை குடும்பங்களை நேரில் சந்தித்து, அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையை முதல்வர் ஆதித்யநாத் வழங்கி, ஆறுதல் தெரிவித்தார்.

click me!