
ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள மெஹ்ரான்கர் கிராமத்தில் ஜசாப் கான் என்ற நபர் வசித்து வந்துள்ளார். 44 வயதாகும் ஜசாப் கானை, கடந்த 20-ம் தேதி பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக பொக்ரானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் கணுக்காலில் கடித்தது, பின்னர் அவர் பொக்ரானில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் சிகிச்சை பெற்று ஜூன் 25 அன்று வீடு திரும்பினார். ஆனால், ஒரு நாள் கழித்து, மீண்டும் அவரை பாம்பு கடித்துள்ளது. ஆனால் இந்த முறை அவரது மற்றொரு காலில் பாம்பு கடித்தது.
இரண்டு முறையும், ராஜஸ்தானின் பாலைவனப் பகுதிகளில் பொதுவாகக் காணப்படும் பாம்பின் துணை இனமான 'பாண்டி' என்று அழைக்கப்படும் பாம்பு கான் கடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சோகமான மற்றும் வினோதமான சம்பவம் குறித்து பனியானா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து! தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறல்.. 25 பேர் உடல் கருகி பலி..!
முதல் பாம்புக் கடியிலிருந்து ஜசாப் கானின் உடல் இன்னும் மீண்டு வருவதால், இரண்டாவது முறையும் பாம்பு கடித்ததால், அந்த விஷம் உடலில் ஏறி, அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜசாப்பிற்கு தாய், மனைவி, நான்கு மகள்கள் மற்றும் 5 வயது மகன் உள்ளனர். ஜசாப்பின் மரணத்திற்கு காரணமான பாம்பை அவரது குடும்பத்தினர் கொன்றுள்ளனர். எனினும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாத நிலை உள்ளது” டி.கே சிவக்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்