
கூகுள் தேடலின்போது அதிகமாக இடம் பெற்ற வார்த்தைகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் செய்தி வெளியிடப்படும். அந்த வகையில் இந்த வருடம், கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் வெளியிடும் பட்டியலில், பொதுவாக தேடப்பட்ட வார்த்தைகள், பாடல்கள், படங்கள், நபர்கள், விளையாட்டு நிகழ்வுகள், வாட் இஸ்?, ஹௌ? போன்ற கேள்விகள், செய்திகள் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்திய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த வரிசையில் படங்கள் பிரிவில் பாகுபலி 2 இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில், இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக பாகுபலி 2 உள்ளது. இது உலகளவில் 7-வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக், லைவ் கிரிக்கெட் ஸ்கோர் ஆகிய வார்த்தைகள் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள கேள்விகள் பிரிவு பட்டியலில் முதல் இடத்தை 'வாட் இஸ் ஜி.எஸ்.டி.?' என்ற வார்த்தையும், மூன்றாவது இடத்தைப் 'வாட் இஸ் ஜல்லிக்கட்டு?' என்ற வார்த்தைகள் உள்ளன.
இது மட்டுமல்லாது ஆதர் எண் - பான் கார்டு இணைப்பு, ஜியோ ஃபோன் வாங்கு முறை, ஹோலி வண்ணத்தை முகத்தில் இருந்து நீக்குவது போன்ற விஷயங்களும் அதிகளவில் தேடப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவன பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.