
மசூதியை எந்த இடத்திலும் கட்டிக்கொள்ளாம், கோயிலை அப்படி நினைத்த இடத்தில் கட்டிக்கொள்ள முடியாது என்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி குதர்க்கமாகப் பேசியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் ராமர் கோயில் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இது குறித்துசுப்பிரமணிய சாமி நிருபர்களுக்கு டெல்லியில் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “
உச்ச நீதிமன்றத்தில்ராமர் கோயில் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், எங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.
ராமர் கோயில் பிரச்சினையை இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்று நான் கேட்டுக்கொண்டு, அதன்பின் அங்க கோயில் கட்டப்படும் என்று கூறுவேன்.
மசூதியை எந்த இடத்திலும் கட்டிக்கொள்ளலாம் ஆனால், கோயிலை அனைத்து இடத்திலும் கட்ட முடியாது. ஆதலால், எங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. ஆதலால், முடிவு எங்களுக்கு சாதகமாகவே வரும் என நினைக்கிறேன். மேலும், தற்போது உள்ள ராமர்கோயிலில் பூஜை நடத்த அனுமதி கேட்பேன். ’’ எனத் தெரிவித்தார்.
ராமர் கோயில் வழக்கில் உங்கள் பங்கு என்ன? இந்த வழக்கில் உங்களுக்கு என்ன பங்கு இருக்கிறது என்று நீதிமன்றம் உங்களிடம் கேள்வி கேட்டுள்ளதே என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு சுப்பிரமணிய சாமி கூறுகையில், “ நான் ராமர் கோயில் இடத்துக்காக நான் என்னை இந்த வழக்கில் இணைக்கவில்லை.
இந்த நாட்டில் பிறந்தவர் என்ற அடிப்படையில், வழபாடு உரிமை எனக்கு இருக்கிறது. அதற்காக வழக்கில் இணைந்துள்ளேன்’’ என்று தெரிவித்தார்.