ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு அறிவித்த மோடிக்கு எதிர்ப்பு - நாடு முழுவதும் நவம்பர் 8 ல் ஆர்ப்பாட்டம்...!

 
Published : Oct 24, 2017, 12:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு அறிவித்த மோடிக்கு எதிர்ப்பு - நாடு முழுவதும் நவம்பர் 8 ல் ஆர்ப்பாட்டம்...!

சுருக்கம்

The Modi government has condemned the government of the state of affairs on November 8 to protest against the loss of the note.

ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பை அறிவித்த மோடி அரசை கண்டித்து நவம்பர் 8ல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் கூட்டாக அறிவித்துள்ளனர். 

கறுப்புப் பணத்தை ஒழிப் பதற்காக மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. 

இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளிலும் ரிசர்வ் வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். ஏராளமானோர் வங்கி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 

பழையா நோட்டிற்கு பதிலாக புதிய 500 ரூபாய் நோட்டும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டும் வெளியிடப்பட்டது. 

இதன்மூலம் மக்கள் சில்லரை தட்டுப்பாட்டிலும் சிக்கி தவித்தனர். ஆனால் அதன்பிறகு பிரபலங்களின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ஏராளமான புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கின. 

மேலும் கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி களமிறங்கும் போது குடிமகன் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் ஓராண்டு காலம் ஆகியும் இதுவரை அப்பணம் செலுத்தப்படவில்லை. முறையான விளக்கமும் அளிக்கவில்லை. இதையடுத்து டிஜிட்டல் முறையையும் மோடி கையில் எடுத்தார். 

இந்நிலையில், வரும் நவம்பர் 8 ஆம் தேதி ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பை அறிவித்த மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் கூட்டாக முடிவு செய்து அறிவித்துள்ளனர். 


 

PREV
click me!

Recommended Stories

H-1B visa: இந்திய குடும்பங்களை பிரிக்கும் டிரம்ப் உத்தரவு.! ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் தம்பதிகள்.!
Shivraj Patil: முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சிவ்ராஜ் பாட்டீல் காலமானார்