காதலியுடன் வெளியில் சுற்றித்திரிந்த சுகேஷ் சந்திரா  - 2 காவலர்கள் சிறையில் அடைப்பு..!

 
Published : Oct 24, 2017, 09:48 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
காதலியுடன் வெளியில் சுற்றித்திரிந்த சுகேஷ் சந்திரா  - 2 காவலர்கள் சிறையில் அடைப்பு..!

சுருக்கம்

Sukesh Chandrasekar who was arrested for trying to bribe the Election Commission officials in the twin leaf case has been imprisoned for 2 police custody.

இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை வெளியில் உலாவ விட்ட 2 போலீசார் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாகக் கூறி டி.டி.வி.தினகரனிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

சுகேஷ் சந்திரா மீது நாடு முழுவதும் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. விசாரணைக்காக பெங்களூர் அழைத்துவரபட்ட சுகேஷ் சொகுசு ஓட்டலில் தங்கி காதலியுடன் சுற்றி திரிந்ததாக வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்தது. 

இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பெங்களுரூவில் சுகேஷ் சந்திரசேகர் தங்கி இருந்த நாட்களில் சுதந்திரமாக சுற்றித்திரிந்தது தெரியவந்தது.

இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு சலுகை காட்டியதாக டெல்லி போலீசார் 7 பேர் பணி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  

அதைதொடர்ந்து இன்று சலுகை காட்டிய இரண்டு போலீசார் சிறையில் அடைக்கப்பட்டனர். 

PREV
click me!

Recommended Stories

H-1B visa: இந்திய குடும்பங்களை பிரிக்கும் டிரம்ப் உத்தரவு.! ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் தம்பதிகள்.!
Shivraj Patil: முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சிவ்ராஜ் பாட்டீல் காலமானார்