ஆட்டை திருமணம் செய்த 90 கிட்ஸ் இளைஞர்...! தோஷ நிவர்த்திக்காக இப்படியா..?

Published : Apr 04, 2022, 01:37 PM ISTUpdated : Apr 04, 2022, 01:43 PM IST
ஆட்டை திருமணம் செய்த 90 கிட்ஸ் இளைஞர்...! தோஷ நிவர்த்திக்காக இப்படியா..?

சுருக்கம்

திருமண தடையை நீக்குவதற்காக இளைஞர் ஒருவர் ஆட்டை திருமணம் செய்த நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

விசித்திரமான திருமணம்

 திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்று கூறுவார்கள் ஆனால் இப்பொழுது உள்ள காலத்தில் பெண்ணே கிடைக்காத காரணத்தால் 90ஸ் கிட்ஸ் அல்லல்பட்டு வருகின்றனர். இதனால்  இந்தோனேசியாவில் குக்கரை திருமணம் செய்தார் ஒரு இளைஞர் இது சமூக வலைதளங்களில் மிகவும் பேசுபொருளாக அமைந்தது. இதே போல கம்போடியாவில் பெண் ஒருவர் கணவனின் மறுபிறவி என நினைத்து பசுவை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஜெர்மனியில் ஊவ் மிட்செர்லிச் என்ற நபர் தான் பாசமாக வளர்த்து வந்த பூனை நீண்ட காலம் உயிர் வாழாது என மருத்துவர்கள் தெரிவித்திருந்தநிலையில் சிசிலியா என்ற பூனையை திருமணம் செய்து கொண்டார். இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிகழ்வு வெளி நாடுகளில் மட்டுமே இது போன்ற அரிய நிகழ்வு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இது போன்ற அதிசய திருமணம் நடைபெற்றுள்ளது. அதுவும் பெண் ஆட்டை திருமணம் செய்துள்ளார் 90 கிட்ஸ்...

ஜாதகத்தில் தோஷம்

90 கிட்ஸ் இளைஞர்களுக்கு பெண் கிடைத்தாலும் திருமணம் நடைபெறுவது பெரிய சாதனையாக கூறப்பட்டு  வருகிறது. அந்த வகையில் தான் தோஷம் எனக்கூறி திருமணம் நடைபெறாமல் தடை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. திருமணத்திற்கு பெண் செட் ஆனாலும் ஜாதகம் சரியில்லையென்று கூறி திருமணம் தள்ளிக்கொண்டே செல்லும், ஜாதகத்தையும் மீறி திருமணம் செய்தால் பெற்றோர் உயிருக்கு ஆபத்து என கூறி ஜோசியர் அதிர்ச்சி ஏற்படுத்துவார்கள். இதனால் பலருக்கு  திருமண நிகழ்வு அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் தடை பட்டு விடும்.  அப்படி ஒருவருக்கு ஏற்பட்ட தடையை தான் தற்போது உடைத்துள்ளார். ஆந்திராவை மாநிலம் நுஜ்வித் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு வீட்டில் உள்ளவர்கள் பெண் பார்த்துள்ளனர்.  ஆனால் பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் கைகூடி வராத நிலைதான் ஏற்பட்டது. ஏன் திருமணம் செட் ஆக மாட்டேங்குதுனு நினைத்த ரமேஷின் பெற்றோர் ஜோசியரிடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது ஜோசியர் ரமேஷின் ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். குறிப்பாக ரமேஷின் ஜாதகத்தில் இரண்டு தாரம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷின் பெற்றோர் என்ன பரிகாரம் செய்யலாம் என கேட்டுள்ளனர். அதற்கு பெண் ஆட்டை ரமேஷ் திருமணம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார் ஜோசியர், 

 ஆட்டை திருமணம் செய்த 90 கிட்ஸ் 

இதே போல இரண்டு தாரம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாழி கட்டி தங்களது தோஷச்சை கழிப்பார்கள் ஆனால் இந்த ஜோசியரோ ஆட்டை திருமணம் செய்ய வேண்டும் என புதுவகையாக கூறியுள்ளார்.இதனை நம்பிய ரமேஷின் குடும்பத்தார் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். தெலுங்கு வருடப்பிறப்பு அன்று தடபுடலாக கோயிலில் திருமணம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஓத நடைபெற்ற திருமணத்தில் மணமகன் வீட்டார் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜாதகத்தில் ஏற்பட்ட தோஷத்திற்கு பரிகாரம் செய்யப்பட்டதால்  விரைவில் ரமேஷ்க்கு திருமணம் நடைபெறும் என அவரது பெற்றோர் நம்பிக்கையில் உள்ளனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியாவுக்கு எதிராக சதி... ஒரே அடியில் பாடம் கற்றுக்கொடுக்கணும்..! யூனுஸ் அரசுக்கு எதிராக எடுக்க வேண்டிய ஐந்து நடவடிக்கைகள்..!
இஸ்லாமியர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ். தலைவரின் சர்ச்சை பேச்சு!