Skyroot: வரலாற்றில் முதல்முறை! இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விரைவில் விண்ணில் பாய்கிறது: எப்போது?

By Pothy RajFirst Published Nov 8, 2022, 5:19 PM IST
Highlights

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட், தனியார் நிறுவனம் தயாரித்த முதல் ராக்கெட்டான விக்ரம்-எஸ்(Vikram-s) வரும் 12 முதல் 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட், தனியார் நிறுவனம் தயாரித்த முதல் ராக்கெட்டான விக்ரம்-எஸ்(Vikram-s) வரும் 12 முதல் 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. 

Governor Vs CM: ஆதிக்கம் செலுத்தும் ஆளுநர்கள்: எதிர்க்கும் 3 தென் மாநில முதல்வர்கள்

முதல்முறையாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் அனுப்பும் இந்த முயற்சிக்கு பிரரம்ப்(தொடக்கம்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் 3 விதமான பேலோடுகள் உள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்படுகிறது.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் சிஇஓ, நிறுவனர் பவன் குமார் சந்தனா கூறுகையில் “ காலநிலையைப் பொறுத்து நாங்கள் தயாரித்துள்ள ராக்கெட் வரும் 12 முதல் 16ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும். 

பாஜகவின் அகங்காரம்! மோர்பி பாலம் விபத்துக்கு இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை: ப.சிதம்பரம் விளாசல்

இந்தியாவில் முதல்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஒருநிறுவனம் ராக்கெட்டை விண்ணுக்குச் செலுத்துவது இதுதான் முதல்முறை. விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களும் வரலாம் என்று 2020ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி அளித்தபின் விண்வெளித்து துறைக்கு  புதிய சகாப்தம் பிறந்துள்ளது.விக்ரம்-எஸ் ராக்கெட் சிங்கிள் ஸ்டேஜே் ராக்கெட்டாகும். 

இதில் 3 விதமான பேலோட் உள்ளன. மிகக்குறுகிய காலத்தில் ஸ்கைரூட் இதை தயாரித்துள்ளது, எங்களுக்கு இஸ்ரோ நிறுவனமும், என் ஸ்பேஸும் சிறந்த ஆதரவை அளித்தனர். 

பணமதிப்பிழப்பு! இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு: நோக்கம் நிறைவேறியதா? உண்மை வெளிவருமா?

நாங்கள் அனுப்பும் முதல் ராக்கெட் இஸ்ரோவின் நிறுவனரான விக்ரம் சாராபாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக அனுப்புகிறோம். ஸ்கைரூட் நிறுவனம், வர்த்தகரீதியாக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. விலைகுறைவான செயற்கைக்கோள்களை, குறைந்த செலவில் அனுப்பவதற்கு ஏரோஸ்பேஸ் நிறுவனம் உதவும் ”எனத் தெரிவித்தார்


 

click me!