இந்திய படையில் இருப்பது கிழட்டு போர் விமானங்கள்! பாகிஸ்தான் வைத்திருப்பதோ அசத்தல் அமெரிக்க விமானங்கள்: வைரலாகிறது விமானப்படை அதிகாரிகளின் ‘இயலாமை’ ஆவேசம்.

By Vishnu PriyaFirst Published Mar 1, 2019, 1:32 PM IST
Highlights

அபிநந்தன்....

கைகளை கூப்பி, கண்களை மூடி தேசமே இந்த விமான வீரருக்காக பிரார்தித்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானிடம் போர் கைதியாக சிறைபட்டிருக்கும் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையை தாண்டி, இந்தியாவினுள் அனுப்பப்படும் தருணம் எப்போது? என்று இந்தியாவின் அத்தனை விழிகளும் எல்லைக்கோட்டை நோக்கியே உறைந்திருக்கின்றன.

அபிநந்தன்....

கைகளை கூப்பி, கண்களை மூடி தேசமே இந்த விமான வீரருக்காக பிரார்தித்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானிடம் போர் கைதியாக சிறைபட்டிருக்கும் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையை தாண்டி, இந்தியாவினுள் அனுப்பப்படும் தருணம் எப்போது? என்று இந்தியாவின் அத்தனை விழிகளும் எல்லைக்கோட்டை நோக்கியே உறைந்திருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இந்திய விமானப்படையின் வீரமும், தீரமும்,  தியாகமும் ஆராதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கூடவே சில ஆதங்க  குரல்களும் கேட்கின்றன. பாராட்டுக்கள் எல்லாம் பொதுமக்களிடமிருந்து வர, ஆதங்கமோ விமானப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து வெளிப்படுகிறது. இது பற்றி பாதுகாப்பு துறை பற்றிய விமர்சகர்கள் புட்டுப் புட்டு வைக்கும் விஷயங்களாவன....

 

நம் நாடு தொழில்நுட்ப வளர்ச்சியில் சர்வதேசத்தின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக போய்க் கொண்டிருக்கிறதுதான். காலையில் பல் துலக்க கையிலெடுக்கும் பிரஷ்ஷில் துவங்கி இரவில் தூங்குவதற்கு ஆன் செய்யப்படும் ஏஸி வரையில் எல்லாமே அப்டேடட் தரத்தில் இருக்கிறதா என்று கவனித்து கவனித்து வாங்குகிறார்கள் மக்கள். 

ஆனால், நமது முப்படைகளின் உபகரணங்களும் அப்டேடட் வெர்ஷனாக இருக்கிறதா, இல்லையா என உங்களுக்கு தெரியுமா?

பாகிஸ்தானுக்குள் நமது படைகள் தாக்குதல் நடத்திய இரண்டாம் நாளன்று மூன்று எஃப்16 ரக போர் விமானங்களை இந்தியாவினுள் நுழையவிட்டு தாக்குதலுக்கு முயன்றது பாகிஸ்தான். இந்த விமானங்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட 4th generation விமானங்கள். அதாவது தொழில்நுட்ப மற்றும் விரைவு வசதிகளில் மிக அப்டேட் ஆனவை. ஆனால் அந்த மூன்று விமானங்களையும் தடுத்து துரத்திய நம் நாட்டு விமானங்களோ மிக்21 ரகம். இவை 3rd generation விமானங்கள்தான். 

 

தொழில்நுட்பம் மற்றும் திறனில் குறைந்த விமானங்களை வைத்துக் கொண்டு, தங்களை விட ஹைலைட்டான விமானங்களை நம் நாட்டு வீரர்கள் அநாயசமாக துரத்தியடித்தார்கள், சுட்டும் வீழ்த்தினாரக்ள். அதில் ஹைலைட்டாக பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே  மூன்று கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பாகிஸ்தான் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினார் அபிநந்தன். 

 

திரும்ப நினைத்தவரால் முடியவில்லை. காரணம், எஞ்சின் கோளாறு ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் விபத்தில் சிக்கும் முன்பாக பாரசூட் மூலம் குதித்திருக்கிறார் அபி. ஆனால் அவர் விழுந்த இடம் பாகிஸ்தான் என்பதால் சிக்கிக்கொண்டார். அதுவும் போராடி சிக்கியிருக்கிறார். 

 

சின்ன நாடான பாகிஸ்தானிடம் அப்டேடட் போர் விமானங்கள் இருக்க, நம்மிடமோ அவுடேடட் போர் விமானங்கள் இருப்பதுதான் யதார்த்தமான வேதனை. அதிலும் கிட்டத்தட்ட போர் நடப்பது போன்ற சூழ்நிலையிலும் இப்படியான விமானங்களை தருவது கேவலமானது. அட இந்த விமானமும் உருப்படியாக இருந்திருந்தால் அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பியிருப்பாரே!

நம் நாட்டில் இருக்கும் பல போர் விமானங்கள் சுமார் முப்பது வருடங்கள் பலமையானவை. தலைமுறை கடந்த கிழட்டு விமானங்களை வைத்துக் கொண்டுதான் இவ்வளவு சீன் செய்துகொண்டிருக்கிறது மத்திய அரசு. 

தற்போது சேவையில் இருக்கும் மிக் 21 ரக விமானங்கள் அப்படிப்பட்ட கிழட்டு விமானங்கள்தான். 

நமது ஆல்டைம் எதிரிகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றை சமாளிக்க நம் வசம் குறைந்தது 45 ஸ்குவாட்ரன் விமானங்கள் தேவை. ஆனால் நாம் வைத்திருப்பதோ 32 தான். அவையும் டெக்னாலஜியில் நவீனமானவையல்லை. எல்லாம் ரிட்டயர்டு கேஸ் விமானங்களே.

 

நம்மிடம் இருக்கும் ஸ்குவாடர்ன் விமானங்களில் பத்துக்கும் மேற்பட்டவை இன்னும் பத்து மாதங்களில் காலாவதியாகின்றன. அதன் பின் நம் விமானப்படையின் பலம் சீரியஸாகிவிடும். 

ரஃபேல் விமானங்கள் வாங்கியிருந்தால் நம் தோரணை வேறு மாதிரி  இருந்திருக்கும். ஆனால் அதிலும் வெற்று அரசியல்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். 

நம் ஒவ்வொருவரின் கைகளிலும் அப்டேடட் மொபைல்கள் இருக்கின்றன பொழுதை போக்க, ஆனால் தேசத்தை பாதுகாக்க அவுடேட்டட் விமானங்கள்தான் இருக்கின்றன நாட்டை காக்க என்பது....   கேவலமே!

click me!