
குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த ஜோஷ்னா பென் படேல் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் ஜோஷ்னாவின் வயிற்றில் கட்டி இருப்பதை கண்டுபிடித்து அதனை அகற்ற லேப்ரோஸ்கோப்பி என்ற அறுவை சிகிச்சை முறைக்கு பரிந்துரைத்தனர்.
சிகிச்சைக்காக ஜோஷ்னா, 2015ம் ஆண்டு டாக்டர் கல்பனா பட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் இரண்டு மருத்துவர்களின் மேற்பார்வையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, பின்னர் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து, ஜோஷ்னாபென் கணவர் பரேஷ் படேன், மருத்துவர்கள் திபென் ஷா, மயக்க மருந்து நிபுணர் ராகேஷ் தோஷி ஆகியோரின் அலட்சியம் தான் காரணம் என்றும் இழப்பீடு கேட்டும் குஜராத் நுகர்வோர் தீர்வு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தீர்வாணையம், நோயாளியின் இறப்பிற்கு காரணம் கார்பன் டை ஆக்சைடு எம்போலிசம் தான் என கண்டுபிடிக்கப்பட்டது. இது முற்றிலும் மருத்துவர்களின் அலட்சியம்தான் என்றும் தீர்ப்பாணையம் கடும் கண்டனம் தெரிவித்தது.
போலி ஆதார்.. போலி பாஸ்போர்ட்.! இந்தியாவில் அடுத்தடுத்து கைது - பரபரப்பு பின்னணி
மேலும், நோயாளியின் இறப்புக்கு மருத்துவர்களே பொறுப்பு எனக் கூறிய தீர்ப்பாணையத்தின் தலைவர் ஆர் என் மேத்தா, இரு மருத்துவர்களும் சேர்ந்து, நோயாளியின் வயது மற்றும் தொழிலை கருத்தில் கொண்டு 33.70 லட்ச ரூபாய் பணத்தை 2015ம் ஆண்டு முதல் கொண்டு, 10% வட்டியுடன் சேர்த்து 60 நாட்களுக்குள் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், வழக்கு செலவுக்காக ரூ.25000 கூடுதலாக கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.