
ஃபேஸ்புக்கில் பழகிய நண்பருடன் பெண் ஒருவர் பத்மாவத் படத்துக்கு சென்றபோது தியேட்டரில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு 19 வயது இளம்பெண்ணும் இளைஞர் ஒருவரும் ஃபேஸ்புக்கில் பழக்கமாகியுள்ளனர்.
அவர்கள் இருவரும் நீண்ட நேரமாக ஃபேஸ்புக்கில் உரையாடிக்கொண்டிருப்பது வாடிக்கையாக இருந்துள்ளது. இந்நிலையில் புதிதாக வெளியாகியுள்ள பத்மாவத் திரைப்படத்திற்கு இருவரும் போலாம் என முடிவெடுத்துள்ளனர்.
இதையடுத்து ஹைதராபாத் பிரசாந்த் திரையரங்கிற்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது மக்கள் கூட்டம் குறைவாக இருப்பதை பயன்படுத்திகொண்ட இளைஞர் அந்த பெண்ணை அந்தரங்க இடங்களில் கை வைத்து தொல்லை கொடுத்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். மேலும் பெண்ணை பாதுகாக்க தவறிய தியேட்டர் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் அந்தரங்க உடல் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்.
சமூகவலைதளங்கள் மூலம் நண்பர்களாபவர்கள் முன் பின் அறிமுகம் இல்லாத நபருடன் வெளியே செல்வது ஆபத்தானது என்பதை பெண்கள் உணராமல் நட்பு ரீதியாக என கூறுவது மழுப்பும் செயல்தான் என புரிந்து கொள்ள வேண்டும்.