சாலையில் தறிகெட்டு ஓடிய கார் - பாதசாரிகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

 
Published : Feb 02, 2018, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
சாலையில் தறிகெட்டு ஓடிய கார் - பாதசாரிகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

சுருக்கம்

5 people death for car accident in uttarpradesh

உத்திரபிரதேசத்தில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் நடந்து சென்றவர்கள் மீது மோதி பின்னர் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பாதசாரிகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

உத்திரபிரதேசம் லக்னோ நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒருவர் சைக்கிளில் குறுக்கே வந்துள்ளார். 

அப்போது அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பியுள்ளார். இதில் தாறுமாறாக ஓடிய  கார் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது பயங்கமாக மோதி பின்னர் மரத்தின்மீது மோதியது. 

இதில் காரின் முன்புறம் முழுவதுமாக சேதமடைந்தது. இதில் காரில் இருந்த 2 பேர் மற்றும் பாதசாரிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் 3 படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

'பாகுபலி' ராக்கெட் ரெடி.. திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்பு வழிபாடு!
இதுதான் மறுசுழற்சியா? கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பீர் பாட்டில் கிறிஸ்துமஸ் மரம்!