மின்சாரச் சட்டத்திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது சந்தேகம்?

By Pothy RajFirst Published Nov 28, 2022, 4:46 PM IST
Highlights

மின்சாரச் சட்டத்திருத்த மசோதா டிசம்பர் 7ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேறுவதும், தாக்கல் செய்வதும் சந்தேகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

மின்சாரச் சட்டத்திருத்த மசோதா டிசம்பர் 7ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேறுவதும், தாக்கல் செய்வதும் சந்தேகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

மின்துறையில் தனியாருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மின்துறை சட்டத்திருத்த மசோதா இருக்கிறது. இந்த மசோதாவை கடந்த கூட்டத்தொடரில் மக்களவையில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்கேசிங் அறிமுகம் செய்தபோது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து இந்த மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

ஜூலை-செப்டம்பரில் வேலையின்மை வீதம் 7.2 சதவீதமாகக் குறைந்தது: என்எஸ்ஓ அறிக்கை

பாஜக மூத்த தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு அடுத்தவாரம் கூடி இந்த மசோதாவை ஆய்வு செய்ய இருக்கிறது. பாஜக மூத்த தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் டிசம்பர் 1ம்தேதி கூடுகிறது.

அதாவது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 6 நாட்களுக்கு முன்புதான் நிலைக்குழுக் கூட்டம் தொடங்குகிறது.

மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவும், இந்த மசோதா குறித்து தீர ஆய்வு செய்து 3 மாதங்களில் அறிக்கை அளிக்க நிலைக்குழுவுக்க உத்தரவிட்டிருந்தார். ஆனால், டிசம்பர் 1ம் தேதிதான் நிலைக்குழுக் கூட்டம் தொடங்குகிறது, அதன்பின், இந்த நிலைக்குழுக் கூட்டம் நடந்து, இந்த மசோதாவின் ஒவ்வொரு அம்சங்களாக ஆய்வு செய்து அறிக்கையை நாடாளுமன்றத்தின் குளிர்காலக்கூட்டத்தில் தாக்கல்  செய்வது கடினமாகும். 

மின்துறை சட்டத்திருத்த மசோதா!27லட்சம் மின்ஊழியர்கள் மத்திய அ ரசுக்கு எச்சரிக்கை

இந்த மசோதா குறித்து நிலைக்குழு அறிக்கை தயார் செய்தாலும், 2023  பட்ஜெட் கூட்டத்தொடருக்குப்பின்புதான் நாடாளுமன்றம் விவாதத்துக்கு எடுக்கும். அதுவரை மின்சாரச் சட்டத்திருத்த மசோதா நிலைகுழுவிலிருந்து நாடாளுமன்றம் செல்ல வாய்ப்பில்லை.

ஆதலால், வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் மின்சாரச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவோ அல்லது விவாதிக்ககப்படவோ வாய்ப்பில்லை என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

click me!