Omicron : ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 30 பேர் “மாயம் ? “ அய்யய்யோ..தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்…

By Raghupati RFirst Published Dec 3, 2021, 11:46 AM IST
Highlights

ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 30 பேர் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனாவின் மற்றொரு திரிபான ‘ஒமைக்ரான்’ என்ற வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை வந்த திரிபுகளில், இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகளும் அறிவியலாளர்களும் கணிக்கின்றனர்.இது உலகம் முழுவததையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது ஒமைக்ரான் தொற்று.

இந்தியாவில், ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்ட இருவரும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதை மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்டா கொரோனா வைரசை விட ஒமிகிரான் கொரோனா வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது. எனவே முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்தி கொள்ளுவது உள்ளிட்ட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஒமிக்ரான் பரவல் குறித்து அச்சம் அடையத் தேவையில்லை; அதேவேளையில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள  நாடுகளில் இருந்து வந்த 30 பேர் ஆந்திராவில்  காணாமல் போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  ஆந்திராவில் இருக்கும் விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சுய விவர படிவங்களை நிரப்ப வேண்டும் என்று விதி உள்ளது.அதன்படி, அப்படிவத்தை நிரப்பிய பிறகே பயணிகளை வெளியே செல்ல அனுமதிக்கின்றனர்.இதில் விசாகப்பட்டினத்தில் தங்குவதாக சுமார் 60 பேர் தெரிவித்து இருக்கின்றனர். 

அதில் 30 பேர் இப்போது கண்காணிப்பில் இருக்கின்றனர். மற்ற 30 பேர் கண்டுபிடிக்க முடியாததால் போலீசார் திணறிவருகின்றனர். இதில் 9 பேர் ஆப்ரிக்கா மற்றும் 2 பேர் தென் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தவறான முகவரியை கொடுத்து ஏமாற்றியவர்களை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கின்றனர் காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள்.இந்த செய்தி ஆந்திராவில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.

click me!