ரயிலுக்கும் ப்ளாட்பாரத்திற்கு இடையில் சிக்கிய பெண்... நூலிழையில் உயிரை காப்பாற்றிய போலீசார்..!

By Thiraviaraj RMFirst Published Dec 3, 2021, 10:47 AM IST
Highlights

மற்றொருவர் தன் சமநிலையை இழந்து, ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள இடைவெளிக்கு அருகில் ஆபத்தான முறையில் விழுந்தார். 

இரு பெண்கள் பிளாட்பாரத்தில் இறங்கும் போது, ​​ஒருவர் தன் சமநிலையை இழந்து, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளியில் ஆபத்தான விழுந்தார். அந்தப் பெண்ணை நூலிழையில் போலீசார் காப்பாற்றினார். 

வங்காளத்தில் புருலியா ஸ்டேஷனில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) அதிகாரி, ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்க முயன்று சமநிலையை இழந்ததால், ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையிலான இடைவெளியில் தவறி விழுந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார்.

 

ரயில்வேயால் ட்வீட் செய்யப்பட்ட ஒரு சிசிடிவி காட்சியில், இரண்டு பெண்கள் சந்த்ராகாச்சி-ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் ரயில் ப்ருலியா ஸ்டேசனில் நின்று கிளம்பும்போது அதில் இருந்து குதித்தனர். அவர்களில் ஒருவர் பிளாட்பாரத்தில் இறங்கும் போது கீழே விழுந்தார். ​​மற்றொருவர் தன் சமநிலையை இழந்து, ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள இடைவெளிக்கு அருகில் ஆபத்தான முறையில் விழுந்தார். ஒரு சில நொடிகளில் ரயிலுக்கு அடியில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் நேர இருந்தது.

RPF சப்-இன்ஸ்பெக்டர் பப்லு குமார் ஓடி வந்து அந்தப்பெண்ணை சரியான நேரத்தில் பிளாட்பாரத்தில் இழுத்தார். மேலும் பலர் அந்தப் பெண்ணுக்கு உதவ விரைந்து வந்தனர். ஒரு பயணி உட்பட, அவரைக் காப்பாற்ற குதிக்க முயல்கிறார்.



On 29.11.21 SI/Bablu Kumar of RPF Post Purulia saved the life of a lady passenger while she was trying to de-board & almost come in the gap between train & platform in running train no 22857 at Purulia station. pic.twitter.com/qC5eHeDu45

— RPF Adra Division (@rpfserada)

 

ஓடும் ரயிலில் ஏறக்கூடாது, இறங்கக்கூடாது என அதிகாரிகள் பலமுறை எச்சரித்தாலும், கெஞ்சினாலும், பயணிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

click me!