சசிகலாவுக்கு சலுகை விவகாரம் - ரூபாவுக்கு வக்கீல் நோட்டீஸ்...

 
Published : Jul 26, 2017, 07:39 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
சசிகலாவுக்கு சலுகை விவகாரம் - ரூபாவுக்கு வக்கீல் நோட்டீஸ்...

சுருக்கம்

The DIG should apologize for saying that he had been bribed to pay Sasikala in prison

சசிகலாவுக்கு சிறையில் சலுகை  அளிக்கப்பட்டதற்கு தான் லஞ்சம் பெற்றதாக கூறியதற்கு டிஐஜி ரூபா  மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் எனவும் டிஜிபி சத்யநாராயணராவ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.

ரூபாவின் குற்றச்சாட்டை சத்தியநாராயணராவ் முழுவதுமாக மறுத்தார். இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலா லஞ்சம் பெற்றுக் கொண்டு  சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருவேன் என்றும் முன்னாள் சிறைத்துறை  டிஜிபி சத்யநாராயணராவ் ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!