பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா...!!! பாஜகவுடன் கூட்டனியா?

 
Published : Jul 26, 2017, 07:00 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா...!!! பாஜகவுடன் கூட்டனியா?

சுருக்கம்

Bihar Chief Minister Nitish Kumar resigned his post. The letter was handed over by Governor Kesar Nath Tripathi.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநர் கேசர்நாத் திரிபாதியை சந்தித்து வழங்கினார்.

பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. இதில் நிதிஷின் கட்சிக்கு 71 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சிக்கு 80 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸுக்கு 27 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

இதனிடையே ரயில்வே அமைச்சராக லாலு இருந்தபோது, ஐ.ஆர்.சி.டி.சி. ஹோட்டலுக்கு நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டு இருந்து வருகிறது.

இதுகுறித்த சிபிஐ குற்றப்பத்திரிக்கையில், லாலுவின் மகன் தேஜஸ்வியின் பெயரும் உள்ளதால், அவரைப் பதவிவிலக முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தி வந்தார்.

ஆனால் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த லாலு, தமது மகனை பதவி விலக மாட்டார் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்த கடித்தத்தை ஆளுநர் கேசர்நாத் திரிபாதியை சந்தித்து வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார் கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!