பெண்கள் சபரிமலைக்கு வந்தால் என்னென்ன நடக்கும்? கதிகலங்க வைத்த வைத்த தேவசம்போர்டு பத்மகுமார்...

By sathish kFirst Published Oct 2, 2018, 10:04 AM IST
Highlights

’வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!’ இப்படித்தான் சபரிமலைக்கு, எல்லா வயது பெண்களும் செல்லலாம்!என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கின்றது (பெண்கள்) உலகம். 

’வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!’ இப்படித்தான் சபரிமலைக்கு, எல்லா வயது பெண்களும் செல்லலாம்!என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கின்றது (பெண்கள்) உலகம். 

ஆனால் அதேவேளையில், எல்லா வயது பெண்களும் சபரிமலைக்கு வருவதென்றால் அதில் இருக்கக்கூடிய சிக்கல்கள், அவர்களுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு, வரும் இடத்தில் பெண்கள் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கும் அசெளகரியங்கள்! உள்ளிட்ட பலவற்றை பட்டியலிட்டுள்ளனர் சபரிமலை கோயில் தேவசம்போர்டு உள்ளிட்டவை. 

‘மிகைப்படுத்தப்பட்ட பிரச்னைகள்’ என்று  புறந்தள்ளிவிட முடியாத அந்த விஷயங்களை இப்படியாக வரிசைப்படுத்தலாம்!...

*    மகரவிளக்கு நாளில் குறைந்தது ஐந்து லட்சம் பேர் கூடுவர். பெண்கள் அனுமதிக்கப்படுகையில் 40% வரை கூட்டம் அதிகரிக்கும். இதை எப்படி சமாளிப்பது?

*    கூட்டம் அதிகரிக்கும் போது நடைப்பந்தல் முதல் சரங்குத்தி வரை தடுப்பு வேலிக்குள் பக்தர்கள் காத்திருப்பது வாடிக்கை. இனி பெண்களுக்காக தனி காத்திருப்பு கூடம் அமைக்க வேண்டும்! இது சாத்தியமா? 
நெடும் காத்திருப்பை தவிர்க்க, 18 படிகளின் அகலத்தை அதிகரிக்க தேவசம்போர்டு யோசித்தபோது அதற்கே தடை சொல்லிவிட்டார்கள் தந்திரிகள். 

*    பெண்கள் வந்தால், பெண் போலீஸும் இனி மிக அதிகமாக பணில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இது எந்தளவுக்கு சாத்தியம்? பிற்பகலுக்கு பிறகு வரும் பக்தர்கள் இரவில் சந்நிதானத்தில் தங்கி, மறுநாள் நெய் அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால் இனி, சந்நிதானத்தில் பெண்களும் தங்க வேண்டி வருமே! 

*    சீசன் உச்சம் தொடும் டிசம்பர், ஜனவரியில் குளிர் மிக அதிகமாக இருக்கும். சிறுமிகள், இளம்பெண்கள், வயதான பெண்கள் அதை தாங்குவரா? சன்னிதானத்தில் பெண்களுக்கென தனி மருத்துவமனைகள் உருவாக்கவும், அதிக பெண் மருத்துவர்களை பணியமர்த்தவும் வேண்டும். 

*    சன்னிதானத்தில் மரக்கூடம் வரை வரிசை நிற்கும். இதில் பெண்களுக்கு தனி வரிசையை உருவாக்குவது வெகு சிரமம். 

*    18 படிகளில் நிமிடத்துக்கு முப்பாறு முதல் ஐம்பது ஐம்பத்து இரண்டு பேர் வரை ஏறமுடியும். போலீஸார் மளமளவென தூக்கிவிடும் போது தொண்ணூற்று இரண்டு முதல் நூறு பேர் வரை ஏறமுடியும். கூட்ட நாட்களில் நான்கு கிலோமீட்டருக்கு வரிசை நிற்கும். இந்த நெரிசலை பெண்கள் சமாளிக்க முடியுமா? படிக்கட்டுகளில் பெண்களை எப்படி தூக்கிவிட முடியும்? அகலம் குறுகிய படிகளில், பெண்களுக்கு தனி வரிசை வைத்து, பெண் போலீஸாரால் தூக்கிவிட வசதி செய்ய முடிவது சாத்தியமா?

*    இதையெல்லாம் விட, சன்னிதானத்தில், பம்பையில், நிலக்கல்லில் என அத்தனை இடங்களிலும் பெண்களுக்கு தனியாகவும், பாதுகாப்பாகவும் கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டுமே! சந்நிதானத்தில் இதை செய்வதையெல்லாம் கோயிலின் மரபு எந்தளவுக்கு அனுமதிக்கும்?

*    பெரியார் புலிகள் சரணாலய பகுதிக்குள்தான் சபரிமலை கோயில் அமைந்துள்ளது. யானைகள், புலிகளில் ஆரம்பித்து வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி. இதற்குள் பெண்களின் பாதுகாப்பு?

கடந்த சில வருடங்களுக்கு முன் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய புல்மேடு - பம்பை ஹில்டாப் விபத்துக்களை நினைத்தால் இப்போதும் நடுங்குகிறது தேவசம்போர்டு. இந்நிலையில் இந்த பகுதியில் பெண்களும் வரப்போகிறார்கள் என்றால் நிலைமை என்னாகும்?
....என்று நீள்கிறது அந்த பிரச்னைகள். 

ஆக மொத்தத்தில் இதையெல்லாம் மையமாக வைத்து கேரளத்தில் பெரும் சர்ச்சைகள் வெடித்து ஓடிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ”சபரிமலையின் ஆச்சாரங்களின் மீது நம்பிக்கை உள்ள பெண்கள் கோயிலுக்கு வரமாட்டார்கள். எனது குடும்ப பெண்கள் வர தயாரில்லை.” என்று சென்டிமெண்டலாக ஒரு பொறியை பற்ற வைத்திருக்கிறார் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார். 

இது அப்படியே பற்றி எரிய துவங்கியுள்ளது. ’அய்யப்பன் கடும் பிரம்மச்சாரி தெய்வம்! அவனை சீண்டுவது இந்து தர்மத்துக்கு எதிரானது. விரத மேன்மையுடன், சபரிமலைக்கு மாலை அணிந்து வரும் ஆண்கள் தங்கள் குடும்ப பெண்களை சபரிமலைக்கு வர அனுமதிக்காதீர்கள், ஆன்மீக பாவத்தை செய்யாதீர்கள்!’ என்று தீவிரமாக பரப்ப துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற  தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செயுவது குறித்து நாளை முடிவெடுக்க இருக்கிறது தேவசம்போர்டு.
வீ ஆர் வெயிட்டிங்!

click me!