ஒரே பெண்ணை காதலித்த 2 மாணவர்கள்... போட்டியில் இருவரும் மாற்றி மாற்றி தீ வைத்துக்கொண்ட கொடூரம்!

Published : Oct 01, 2018, 05:44 PM IST
ஒரே பெண்ணை காதலித்த 2 மாணவர்கள்... போட்டியில் இருவரும் மாற்றி மாற்றி தீ வைத்துக்கொண்ட கொடூரம்!

சுருக்கம்

ஒரே மாணவியை காதலித்த இரண்டு மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாற்றி மாற்றி தீ வைத்து கொண்ட சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஒரே மாணவியை காதலித்த இரண்டு மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாற்றி மாற்றி தீ வைத்து கொண்ட சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே ஜக்டியா நகரில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த 2 மாணவர்கள் ஒரே மாணவியை காதலித்து வந்துள்ளனர். மஹேந்தர், ரவி தேஜா ஆகியோருக்கிடையே மாணவியை காதலிப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அவர்கள் இருவரும் நேற்று மாலை மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே சம்பந்தப்பட்ட பெண் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கொலை வெறியுடன் ஒருவருக்கு ஒருவர் தீ வைத்துக் கொண்டனர்.

இதில், மஹேந்தர் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே கருகி பலியானார். ரவி தேஜா என்ற மாணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மஹேந்தர் இறந்தபோது சம்பவ இடத்தில் போலீசார் பீர் பாட்டில்கள் மற்றும் செல்போன்களை கைப்பற்றியுள்ளனர். இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பமாக மூன்றாவதாக பையன் ஒருவன் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மூன்றாவது நபரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் ஒருவர் கூறும்போது, மஹேந்தர் மற்றும் ரவி தேஜா இருவரும் ஒரு மிஷனரி பள்ளியில் வகுப்பு தோழர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளனர். காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளதாக கூறினார்.

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!